NSW மற்றும் விக்டோரியாவில் close contacts-க்கான தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளில் மாற்றம்

கொரோனா வைரஸ் குறித்து ஏப்ரல் மாதம் 20ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

Close contacts of COVID-19 cases are no longer required to isolate for seven days in New South Wales and Victoria. But they need to follow certain rules. (file)

Close contacts of COVID-19 cases are no longer required to isolate for seven days in New South Wales and Victoria. But they need to follow certain rules. Source: AAP Image/Mick Tsikas

கோவிட்-19 தொற்றுநோய் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றபோதிலும், இதுகுறித்த கட்டுப்பாடுகளைத் தளர்த்த முடிவு செய்துள்ளதாக, நியூ சவுத் வேல்ஸ் Premier Dominic Perrottet தெரிவித்தார்.

கோவிட் தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள்-close contacts-க்கான கட்டுப்பாட்டுத் தளர்வு ஏப்ரல் 22 வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன்படி close contacts தம்மை ஏழு நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டியதில்லை என Dominic Perrottet  கூறினார்.

அவர்கள் தங்கள் வீட்டிலுள்ளவர்களைத் தவிர வேறு யாரையும் சந்திப்பதற்கு முன், தினசரி RAT சோதனைகளை மேற்கொள்ள வேண்டும். அவர்கள் முதியோர் மற்றும் ஊனமுற்றோர் பராமரிப்பு மையங்கள், மருத்துவமனைகள், மற்றும் சீர்திருத்த யைங்களுக்குச் செல்ல முடியாது.

Close contacts தங்கள் வீடுகளுக்கு வெளியே, உள்ளரங்குகளில் முகக்கவசம் அணிய வேண்டும். RAT அல்லது PCR இல் அவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டால், அவர்கள் ஏழு நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

Close contacts வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

30 ஏப்ரல் 2022 முதல், தடுப்பூசி போட்டிருக்காத பயணிகள் கட்டாய தனிமைப்படுத்தலை(hotel quarantine) மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை. மாறாக, அவர்கள் வந்த 24 மணி நேரத்திற்குள், RAT சோதனையை மேற்கொள்ள வேண்டும்.

விக்டோரியா மாநிலத்தில் தற்போது Omicron அலை குறையத் தொடங்கியுள்ளதால், அதிக தடுப்பூசி விகிதத்தின் அடிப்படையில் கட்டுப்பாடுகளை எளிதாக்க முடிவு செய்துள்ளதாக சுகாதார அமைச்சர் Martin Foley தெரிவித்தார்.

ஏப்ரல் 22, வெள்ளிக்கிழமை இரவு 11.59 மணி முதல் பின்வரும் கட்டுப்பாட்டு தளர்வுகள் நடைமுறைக்கு வருகின்றன:

விக்டோரிய மாநிலத்தில் எந்த இடத்திற்குள்ளும் நுழைவதற்கு முன்பு, இரண்டு சுற்று தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழைக் காட்ட வேண்டிய அவசியமில்லை.

அதேநேரம் கோவிட் தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள்-Close contacts, 7 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை. ஆனால் அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியிருக்கவேண்டிய 7 நாட்களில், ஆகக்குறைந்தது 5 நாட்களுக்கு RAT சோதனையை மேற்கொண்டு தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

கோவிட் தடுப்பூசி போட்டிருக்காத பயணிகள் இனி ஏழு நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலை மேற்கொள்ளவேண்டிய தேவையில்லை.

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

NSW, விக்டோரியா, NT, தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் குயின்ஸ்லாந்தில் கோவிட் தொடர்பிலான மேலும் 38 இறப்புகள் பதிவாகியுள்ளன.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மேலும் 15,414 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 15 பேர் மரணமடைந்தனர். 

விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 10,628 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 14 பேர் மரணமடைந்தனர். 

டஸ்மேனியாவில் புதிதாக 1,819 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  

NT- இல் புதிதாக 594 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் மரணமடைந்தார்.

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 8,995 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 6 பேர் மரணமடைந்தனர். 

மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 8,080 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 4,256 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருவர் மரணமடைந்தனர். 

ACT- இல் புதிதாக 1,180 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.

ACT   New South Wales   Northern Territory   Queensland   South Australia  Tasmania   Victoria    Western Australia

கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

ACT   New South Wales   Northern Territory   Queensland   South Australia   Tasmania  Victoria   Western Australia 

ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிய: healthdirect.gov.au/covid19

உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு இருக்கும் தெரிவுகள் என்ன என்பதை அறிந்துகொள்ள: servicesaustralia.gov.au

உங்கள் மொழியில் கோவிட்-19-ஐப் புரிந்துகொள்ள சில உதவிகள்: mhcs.health.nsw.gov.au

உங்கள் மொழியில் அனைத்து கோவிட்-19 தகவல்களைப் படிக்க: SBS Coronavirus portal

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

3 min read

Published

Updated




Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now