NSW மாநிலத்தில் புதிதாக 5715 பேருக்கு தொற்று! விக்டோரியாவில் மீண்டும் முகக்கவச கட்டுப்பாடு!!

கொரோனா வைரஸ் குறித்து டிசம்பர் மாதம் 23ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

Testing clinics have been stretched across NSW.

Testing clinics have been stretched across NSW. Source: AAP

  • NSW மாநிலத்தில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 5,000-ஐத் தாண்டியுள்ளது. ஆஸ்திரேலியாவின் எந்தவொரு மாநிலத்திலோ பிராந்தியத்திலோ இவ்வளவு அதிகமான எண்ணிக்கையில் கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்படுவது இதுவே முதல்முறையாகும்.
  • NSW அரசு free rapid antigen test வசதியை வழங்குவது குறித்து பரிசீலித்து வருகிறது. மேலும் சில்லறை வணிகங்கள் மற்றும் விருந்தோம்பல்துறைசார் இடங்களில் கட்டாய QR check-in நடைமுறையை மீண்டும் அறிமுகப்படுத்துவது குறித்தும் ஆராய்ந்துவருகிறது.
  • தொற்று அபாயம் அதிகமுள்ள இடங்களில் முகக்கவசம் அணியுமாறு NSW சுகாதாரத்துறை அனைவரையும் வலியுறுத்தியுள்ளது.  முகக்கவச கட்டுப்பாடு மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கைகளுக்கு NSW மாநில Premier Dominic Perrottet இதுவரை செவிசாய்க்கவில்லை.
  • விக்டோரியாவில், எட்டு வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் உள்ளரங்குகளில் கட்டாயமாக முகக்கவசம் அணியவேண்டும் என்ற நடைமுறை, இன்று வியாழன் இரவு 11:59 மணி முதல் நடைமுறைக்கு வருவதாக Acting Premier James Merlino அறிவித்தார்.
  • குயின்ஸ்லாந்தில் புதிதாக 369 கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். மாநிலத்தில் ஒரே நாளில் பதிவான அதிகூடிய தொற்றாளர்களின் எண்ணிக்கை இதுவாகும்.

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 2,005 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. 10 பேர் மரணமடைந்தனர்.

New South Wales மாநிலத்தில் புதிதாக 5,715 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. ஒருவர்  மரணமடைந்தார்.

டாஸ்மேனிய மாநிலத்தில் புதிதாக 26 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

ACT- இல் புதிதாக 85 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 369 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

NSW பயணம் குறித்த தரவுகள்  மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

VIC பயணம் குறித்த தரவுகள்வெளி நாட்டுப் பயணம் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

ACT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

NT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

QLD பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

SA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

TAS பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

WA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது குறித்த விபரங்களுக்கு covid19.homeaffairs.gov.au/leaving-australia என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்  Smart Traveller இணையத்தளத்தில் வெளியாகும்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:

COVID-19 Vaccination Glossary
Appointment Reminder Tool.


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

NSW 

Victoria 

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania

Northern Territory 


மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

NSW 

Victoria 

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania
Northern Territory


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

3 min read

Published




Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now