உச்சத்தை மிஞ்சிய NSW தொற்றாளர்... எதிர்பார்த்ததற்கு முன்னரே இலக்கை அடைந்த விக்டோரியா

கொரோனா வைரஸ் குறித்து செப்டம்பர் மாதம் 04ஆம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்

NSW Police and Australian Defence Force personnel at Olympic Park, Sydney

Source: AAP/Dan Himbrechts

New South Wales மாநிலத்தில் COVID-19 தொற்று கண்டவர்கள் எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டது

விக்டோரிய மாநிலத்தில் வேகமாகத் தடுப்பூசி வழங்கப்படுகிறது; புதிதாக 190 பேருக்குத் தொற்று

இந்த வார இறுதியில் ACTயில் 70 சதவீதமானவர்கள் தடுப்பூசி போட்டு விடுவார்கள்

தெற்கு ஆஸ்திரேலியாவில், தொற்று அதிகம் பரவிய இடங்களாக இரண்டு Pubகள் அடையாளப் படுத்தப்பட்டன


 

நியூ சவுத் வேல்ஸ்

New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,533 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்று கண்ட 173 பேர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  62 பேருக்கு சுவாசக் கருவிகள் தேவைப்படுகிறது.

தடுப்பூசி போட தகுதியுடையவர்களில் 72 சதவீதமானவர்கள் தடுப்பூசியின் முதல் சுற்றைப் பெற்று விட்டதாகவும், 40 சதவீதமானவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் போட்டு விட்டதாகவும் சுகாதார அமைச்சர் Brad Hazzard அறிவித்தார்.

தொற்று அதிகமாகப் பரவியுள்ள 12 உள்ளூராட்சிப் பகுதிகளில் வாழும் காவல்துறை மற்றும் அவசர சேவை பணியாளர்களை, இந்த வார இறுதிக்குள் தடுப்பூசி போட்டுக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி போட்டுக் கொள்ள இங்கே பதிவு செய்யலாம்.


 

விக்டோரியா

விக்டோரியா மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 190 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்று கண்டவர்களில் 103 பேருக்கு எங்கிருந்து தொற்று ஏற்பட்டது என்பது தெரியும்.

விக்டோரிய மாநிலத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை விரைவில் 70 சதவீதமாகும்.  எதிர்பார்த்ததை விட இந்த இலக்கு முன்னதாகவே எட்டப்படுகிறது.  இருந்தாலும், வணிக நிறுவனங்களுக்கு ஆதரவுத் தொகை வழங்கப்படும் காலம் நீட்டிக்கப்படுகிறது என்று Jobs Minister Martin Pakula கூறினார்..

தடுப்பூசி எங்கே போடலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்.


 

கடந்த 24 மணிநேரத்தில்

  • Moderna தடுப்பூசி, 12 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படலாம் என்று மருந்துகளைக் கட்டுப்படுத்தும் Therapeutic Goods Administration (TGA) அனுமதி வழங்கியுள்ளது.
  • ACT பிராந்தியத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 32 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றுடன் குறைந்தது 19 பேர் சமூகத்தில் நடமாடியுள்ளனர்.  இந்த வார இறுதியில் ACTயில் 70 சதவீதமானவர்கள் தடுப்பூசி போட்டு விடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக, நான்கு வயது சிறுமி ஒருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என்று நேற்று அறிவிக்கப்பட்டது.
  • தெற்கு ஆஸ்திரேலியாவில் அடிலெய்ட் நகரின் வடக்கிலுள்ள இரண்டு Pubகள் தொற்று அதிகம் பரவிய இடங்களாக அடையாளப் படுத்தப்பட்டன.  NSW மாநிலத்திலிருந்து சென்ற கனரக வாகன ஓட்டுனர் இந்த இடங்களுக்குச் சென்றிருக்கிறார் என்றும், பின்னர் அவருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது என்றும் இந்த இடங்களுக்குச் சென்றவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும் தெற்கு ஆஸ்திரேலிய மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
COVID-19 myths
Source: SBS

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

NSW பயணம் குறித்த தரவுகள்  மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

VIC பயணம் குறித்த தரவுகள்வெளி நாட்டுப் பயணம் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

ACT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

NT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

QLD பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

SA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

TAS பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

WA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு covid19.homeaffairs.gov.au/leaving-australia என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்  Smart Traveller இணையத்தளத்தில் வெளியாகும்.


 

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


 

NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:

COVID-19 Vaccination Glossary
Appointment Reminder Tool.


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

NSW 

Victoria 

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania

Northern Territory 


மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

NSW 

Victoria 

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania
Northern Territory


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 


Share

4 min read

Published

Updated

By SBS/ALC Content, Kulasegaram Sanchayan

Source: SBS




Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now