NSW மாநிலத்தில் ஊரடங்கு முடிவு; விக்டோரிய மாநில Ballaratஇல் முடக்கநிலை

கொரோனா வைரஸ் குறித்து செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

 Marrickville, Sydney, Wednesday, September 15, 2021.

Members of the public wear face masks as they go about their daily lives in Marrickville, Sydney, Wednesday, September 15, 2021. Source: AAP Image/Bianca De March

  • NSW மாநிலத்தில் 47.5 சதவீதமானோர் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுள்ளார்கள்
  • விக்டோரிய மாநிலத்தின் Sheppartonஇல் முடக்கநிலை இன்றிரவுடன் முடிகிறது
  • ACTயில் 75 சதவீதமானோர் ஒரு சுற்று தடுப்பூசி போட்டுள்ளார்கள்
  • குயின்ஸ்லாந்து மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம் புதிதாக யாருக்கும் தொற்று பரவவில்லை.

 

நியூ சவுத் வேல்ஸ்

New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,259 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றினால் மேலும் 12 பேர் இறந்துள்ளார்கள்.

மாநிலத்தில் 80 சதவீதமானோர் ஒரு சுற்று தடுப்பூசி போட்டுள்ளார்கள் என்று கூறிய Premier Gladys Berejiklian, மேற்கு சிட்னியில் வாழ்பவர்கள் கவனயீனமாக இருக்க வேண்டா மென்று கேட்டுக் கொண்டார்.

தொற்று அதிகமாகப் பரவியுள்ள 12 உள்ளூராட்சிப் பகுதிகளில் நடைமுறையிலிருக்கும் ஊரடங்கு சட்டம் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகிறது.  மாநிலத்தில் 70 சதவீதமானோர் தடுப்பூசியை முழுமையாகப் போட்ட பின்னர், முடக்க நிலையில் பாரிய தளர்வுகள் அறிமுகப்படுத்தப்படும்.

தடுப்பூசி போட்டுக் கொள்ள இங்கே பதிவு செய்யலாம்.


 

விக்டோரியா

விக்டோரியா மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 423 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றினால் மேலும் நான்கு பேர் இறந்துள்ளார்கள்.

Ballarat நகரில் இன்றிரவு முதல் முடக்கநிலை நடைமுறையிலிருக்கும்.  மெல்பன் நகருக்கு விதிக்கப்பட்ட விதிகள் (ஊரடங்கு விதி தவிர்த்து) அனைத்தும் இங்கும் நடைமுறைப்படுத்தப்படும்.  Shepparton நகரில் புதிதாக யாருக்கும் தொற்று கண்டறியப்படாத காரணத்தால், அங்கு முடக்கநிலை நீக்கப்படுகிறது.

மாநிலத்தின் V/Line இரயில் சேவைகள் பல தொடர்ந்தும் இடையூறுக்குள்ளாகியுள்ளன.  இரயில் சேவைக்குப் பதிலாக பேரூந்துகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.

தடுப்பூசி எங்கே போடலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்.


 

Australian Capital Territory

ACTயில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 13 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  எட்டுப் பேர் தொற்றுடன் சமூகத்தில் நடமாடியுள்ளனர்.

ACTயில் 75 சதவீதமானோர் ஒரு சுற்று தடுப்பூசி போட்டுள்ளார்கள் என்று Chief Minister Andrew Barr கூறினார்.

தடுப்பூசி போட இங்கே பதிவு செய்யலாம்.


 

கடந்த 24 மணி நேரத்தில்

  • Northern Territory பிராந்தியத்தில், தொற்று ஏற்படும் அபாயத்தில் கடமையாற்றுபவர்கள் அனைவரும் கட்டாயமாகத் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனை நடைமுறைக்கு வருகிறது.

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

NSW பயணம் குறித்த தரவுகள்  மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

VIC பயணம் குறித்த தரவுகள்வெளி நாட்டுப் பயணம் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

ACT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

NT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

QLD பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

SA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

TAS பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

WA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு covid19.homeaffairs.gov.au/leaving-australia என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்  Smart Traveller இணையத்தளத்தில் வெளியாகும்.


 

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


 

NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:

COVID-19 Vaccination Glossary
Appointment Reminder Tool.


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

NSW 

Victoria 

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania

Northern Territory 


மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

NSW 

Victoria 

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania
Northern Territory


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 


Share

3 min read

Published

Updated

By SBS/ALC Content, Kulasegaram Sanchayan

Source: SBS




Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now