- New South Wales மாநிலத்தில் தடுப்பூசி பெற முன்னுரிமை பெறும் தகுதி விரிவுபடுத்தப்படுகிறது
- விக்டோரிய மாநிலத்தில் புதிதாக தொற்று கண்டவர்களில் 60 சதவீதத்தினர் மெல்பன் நகரின் மேற்குப் பகுதியில் வாழ்பவர்கள்
- ACT பிராந்தியத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 26 பேருக்குத் தொற்று
- தெற்கு ஆஸ்திரேலியாவில் புதிய தொற்று கண்ட இடங்கள் அடையாளப் படுத்தப்பட்டன
நியூ சவுத் வேல்ஸ்
New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1035 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றுள்ளவர்களில் 714 பேர் சிட்னியின் மேற்கு மற்றும் தென்மேற்கு சிட்னியில் வசிப்பவர்கள். தொற்றினால் இருவர் இறந்துள்ளார்கள், ஒருவர் 70 வயதுகளில் மற்றவர் 80 வயதுகளில்.
தொற்று அதிகமாகப் பரவியுள்ள இடங்களில் தடுப்பூசி பெற முன்னுரிமை வழங்கப்பட்டவர்கள் வயது வரம்பு அதிகரிக்கப் பட்டுள்ளது. இதனால், 40 முதல் 49 வயதுடையவர்கள் விரைவில் தடுப்பூசி முடியும். மளிகை மற்றும் இறைச்சி விநியோகத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், தொற்று அதிகமாகப் பரவியுள்ள இடங்களில் வசிக்காவிட்டாலும் தடுப்பூசி பெற முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
திருமணங்கள் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்தப்படுகின்றன - செப்டம்பர் 3ஆம் தேதி முதல் ஐந்து விருந்தினர்கள் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.
தொற்று அதிகமாகப் பரவியுள்ள 12 உள்ளூராட்சிப் பகுதிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட தொழிலாளர்கள் சென்று வருவதற்கு அனுமதி பெற விண்ணப்பிக்க வேண்டும்.
தடுப்பூசி போட்டுக் கொள்ள இங்கே பதிவு செய்யலாம்.
விக்டோரியா
விக்டோரியா மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 64 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றுள்ளவர்களில் 49 பேருக்கு தொற்று எப்படி ஏற்பட்டது என்பது தெரியும், மற்றைய 15 பேருக்கு தொற்று எப்படி ஏற்பட்டது என்பது குறித்த விசாரணை நடக்கிறது.
Wyndham, Newport, Altona North மற்றும் Hume உட்பட, மெல்பன் நகரின் மேற்குப் பகுதியில் தொற்று அதிகம் பரவியுள்ளது என்று விக்டோரிய மாநில சுகாதார அமைச்சர் Martin Foley கூறினார்.
தடுப்பூசி எங்கே போடலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்.
கடந்த 24 மணிநேரத்தில் நாடளாவிய செய்திகளில்:
- தெற்கு ஆஸ்திரேலியாவின் Port Augustaவிலுள்ள இரண்டு பெட்ரோல் நிலையங்கள் மற்றும் Cedunaவிலுள்ள இரண்டு பெட்ரோல் நிலையங்கள் தொற்று கண்ட இடங்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. கனரக வாகனம் ஓட்டுபவர்கள் இருவர், NSW மாநிலத்திலிருந்து தொற்றுடன் இந்த இடங்களுக்குச் சென்றுள்ளார்கள் என்று தெற்கு ஆஸ்திரேலிய மாநில சுகாதாரத்துறை அறிவித்தது.
- ACT, NSW மற்றும் விக்டோரியா மாநிலங்களிலிருந்து தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்திற்கு செப்டம்பர் 24ஆம் தேதிக்குப் பின்னர் செல்பவர்கள், தாம் தடுப்பூசியின் ஒரு சுற்றையாவது பெற்று விட்டதை உறுதிப்படுத்த வேண்டும்.
தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்
தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:
NSW பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
VIC பயணம் குறித்த தரவுகள், வெளி நாட்டுப் பயணம் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
ACT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
NT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
QLD பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
SA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
TAS பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
WA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு covid19.homeaffairs.gov.au/leaving-australia என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள் Smart Traveller இணையத்தளத்தில் வெளியாகும்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:
COVID-19 Vaccination Glossary
Appointment Reminder Tool.
Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
