தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்க விக்டோரியாவில் $21m ஒதுக்கீடு; 80 சதவீத இலக்கை NSW தாண்டியது

கொரோனா வைரஸ் குறித்து அக்டோபர் மாதம் 19ஆம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

Picha za wafanyakazi wa mstari wa mbele zamulikwa kwenye paa za Sydney Opera House na umma wa NSW ulio chanjwa kuadhimisha kufikisha lengo la 80% ya chanjo.

Picha za wafanyakazi wa mstari wa mbele zamulikwa kwenye paa za Sydney Opera House na umma wa NSW ulio chanjwa kuadhimisha kufikisha lengo la 80% ya chanjo. Source: AAP/DEAN LEWINS

  • விக்டோரிய மாநிலத்தில் மக்கள் தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்க 21 மில்லியன் டொலர்கள் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
  • NSW மாநிலத்தின் பிராந்திய இடங்களில் தொற்று அதிகம் பரவுகிறது
  • ACTஇல் முடக்கநிலை கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படுகின்றன

விக்டோரியா

விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,749 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றினால் மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

மாநிலத்தில் வாழும் 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களில் 89.4 சதவீதமானவர்கள் தடுப்பூசியின் ஒரு சுற்றைப் போட்டிருக்கிறார்கள், 67.2 சதவீதமானவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் போட்டிருக்கிறார்கள்.

விக்டோரிய மாநிலத்தில் மக்கள் தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும் வகையில் தற்காலிக தடுப்பூசி மையங்கள் அமைக்கவும், மக்கள் தடுப்பூசி மையங்களுக்குச் செல்ல போக்குவரத்து வசதி செய்து கொடுக்கவும், வேறு தேவைப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளுக்கும் என்று 21 மில்லியன் டொலர்கள் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக Premier Daniel Andrews அறிவித்தார்.

தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை 70 சதவீதத்தை எட்டியதும் அறிமுகப்படுத்தப்படும் தளர்வுகளில், தனிமைப்படுத்தல் காலம் குறைக்கப் படுவதையும் கருத்தில் கொள்ளப் போவதாக மாநில அரசு உறுதியளித்துள்ளது.

தடுப்பூசி எங்கே போடலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்.


நியூ சவுத் வேல்ஸ்

New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 273 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றினால் மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளார்கள்.

மாநிலத்தில் வாழும் 12 வயது முதல் 15 வயதான சிறுவர்களில் சுமார் 75 சதவீதமானவர்கள் தடுப்பூசியின் ஒரு சுற்றைப் போட்டிருக்கிறார்கள், 35.5 சதவீதமானவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் போட்டிருக்கிறார்கள்.

மாநிலத்தில் வாழும் 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் போட்டிருக்கிறார்கள்.

NSW மாநிலத்தின் பிராந்திய இடங்களில் தொற்று அதிகம் பரவுவது கவலையளிக்கிறது என்று கூறிய தலைமை சுகாதார அதிகாரி Dr Kerry Chant, விரைவில் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அங்கு வாழும் மக்களைக் கேட்டுக் கொண்டார்.

தடுப்பூசி போட்டுக் கொள்ள இங்கே பதிவு செய்யலாம்.


Australian Capital Territory

ACTயில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 24 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்று ஏற்பட்டவர்கள் அனைவருக்கும் தொற்று எங்கிருந்து வந்தது என்பது தெரியும்.

ACTயில் வாழும் 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் போட்டிருக்கிறார்கள் என்பதால் முடக்கநிலை கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

அத்தியாவசியப் பொருட்கள் விற்கும் கடைகள் மட்டுமின்றி அனைத்துக் கடைகளும், எதிர்வரும் வியாழக்கிழமை அக்டோபர் 21ஆம் தேதி இரவு 11 மணி 59 நிமிடம் முதல் வாடிக்கையாளர்களைக் கடைகளுக்குள் அனுமதிக்க முடியும்.

தடுப்பூசி போட்டுக் கொள்ள இங்கே பதிவு செய்யலாம்.


கடந்த 24 மணி நேரத்தில்

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் மூன்று கட்டங்களாக - 70, 80, 90 சதவீத மக்கள் தடுப்பூசியை முழுமையாகப் போட்ட பின்னர் உள்ளூர் மற்றும் சர்வதேச விமானப் பயணங்களுக்கான அனுமதிகள் எப்படியான கட்டுப்பாடுகளைக் கொண்டிருக்கும் என்ற திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.


தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

NSW பயணம் குறித்த தரவுகள்  மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

VIC பயணம் குறித்த தரவுகள்வெளி நாட்டுப் பயணம் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

ACT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

NT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

QLD பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

SA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

TAS பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

WA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு covid19.homeaffairs.gov.au/leaving-australia என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்  Smart Traveller இணையத்தளத்தில் வெளியாகும்.


 

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


 

NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:

COVID-19 Vaccination Glossary
Appointment Reminder Tool.


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

NSW 

Victoria 

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania

Northern Territory 


மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

NSW 

Victoria 

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania
Northern Territory


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 


Share

4 min read

Published

Updated

By SBS/ALC Content, Kulasegaram Sanchayan

Source: SBS




Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now