NSW மாநிலத்தில் எண்பது இலட்சம் பேர் தடுப்பூசி போட்டுள்ளார்கள்

கொரோனா வைரஸ் குறித்து செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

People wearing face masks hold hands while walking through Carlton Gardens in Melbourne, Saturday, September 11, 2021. Victoria has recorded 450 new locally-acquired COVID-19 cases in the past 24 hours. (AAP Image/James Ross) NO ARCHIVING

Source: AAP/James Ross

 

  • NSW மாநிலத்தின் சில பிராந்திய இடங்களில் வாழ்பவர்கள் Covid சோதனை செய்யுமாறு ஊக்குவிக்கப்படுகிறார்கள்
  • விக்டோரிய மாநிலத்தில் 39 சதவீதமானவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுள்ளார்கள்
  • ACTயில் 15 பேருக்கும், குயின்ஸ்லாந்து மாநிலத்தில் ஐவருக்கும் சமூகப் பரவல் மூலம், புதிதாக, தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

 

நியூ சவுத் வேல்ஸ்

New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,599 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றினால் மேலும் எட்டுப் பேர் இறந்துள்ளார்கள்.  அண்மைக்காலத்தில் தொற்று அதிகமாகப் பரவ ஆரம்பித்த நாட்களில் இருந்து மொத்தம் 170 பேர் தொற்றினால் இறந்துள்ளார்கள்.

NSW மாநிலத்தின் பிராந்திய இடங்களான Byron Bay, Bangalow. Jindabyne, Harden, Moruya, Yass, Port Macquarie, Trangie மற்றும் Young ஆகிய இடங்களில், கழிவு நீரில் COVID-19 வைரஸ் கூறுகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.  இந்த இடங்களில் தொற்றுள்ளவர்கள் என்று யாரும் இதுவரை அடையாளம் காணப்படாததால், சுகாதார அதிகாரிகள் கவலை கொண்டுள்ளார்கள்.  தொற்றின் அறிகுறி இருப்பவர்கள் அனைவரையும் உடனடியாக Covid சோதனை செய்யுமாறு அதிகாரிகள் வலியுறுத்தினார்கள்.

NSW மாநிலத்தில் 80 இலட்சம் (8 மில்லியன்) பேர் இதுவரை தடுப்பூசி போட்டுள்ளார்கள், 44.5 சதவீதமானவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுள்ளார்கள்.

தடுப்பூசி போட்டுக் கொள்ள இங்கே பதிவு செய்யலாம்.


 

விக்டோரியா

விக்டோரியா மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 450 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றுள்ளவர்களில் 70 சதவீதமானவர்கள் மெல்பன் நகரின் வடக்கிலுள்ள புறநகர்களில் வாழ்பவர்கள்.

கர்ப்பம் தரித்து 24 வாரங்கள் முடிந்த கர்ப்பிணிப் பெண்கள் தடுப்பூசி பெற, செப்டம்பர் 12ஆம் தேதி முதல் முன்னுரிமை வழங்கப்படுகிறது.

தடுப்பூசி எங்கே போடலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்.


 

கடந்த 24 மணி நேரத்தில்

  • வயது 16ற்கும் மேற்பட்டவர்களில் 50 சதவீதமானவர்கள் முழுமையாகத் தடுப்பூசி போட்ட முதல் (மாநில அல்லது பிரதேச) அதிகார வரம்பு என்ற பெருமையை ACT பிராந்தியம் பெறுகிறது.
  • பிரிஸ்பன் நகரில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 5 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தனிமைப் படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
  • தெற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்பவர்கள் 12 வயதைப் பூர்த்தி செய்திருந்தால், (அறுபது வயதிற்கு மேற்பட்டவர்கள் உட்பட,) அவர்கள் செப்டம்பர் 13ஆம் தேதி முதல் ஃபைசர் தடுப்பூசி பெற முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

COVID-19 myths
Source: SBS

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

NSW பயணம் குறித்த தரவுகள்  மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

VIC பயணம் குறித்த தரவுகள்வெளி நாட்டுப் பயணம் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

ACT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

NT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

QLD பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

SA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

TAS பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

WA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு covid19.homeaffairs.gov.au/leaving-australia என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்  Smart Traveller இணையத்தளத்தில் வெளியாகும்.


 

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


 

NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:

COVID-19 Vaccination Glossary
Appointment Reminder Tool.


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

NSW 

Victoria 

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania

Northern Territory 


மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

NSW 

Victoria 

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania
Northern Territory


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 


Share

3 min read

Published

Updated

By SBS/ALC Content, Kulasegaram Sanchayan

Source: SBS




Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now