- New South Wales மாநிலத்தில் ஆறு மில்லியன் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன
- விக்டோரியா மாநிலத்தில் தடுப்பூசி பெற பலர் தகுதியாகிறார்கள்
- ACTயில் தொற்றுள்ளவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது
- குயின்ஸ்லாந்து மாநிலத்தில் புதிதாக இருவருக்கு சமூகப் பரவல் மூலம் தொற்று ஏற்பட்டுள்ளது.
நியூ சவுத் வேல்ஸ்
New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 753 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றுள்ளவர்களில் 49 பேர் சமூகத்தில் தொற்றுடன் நடமாடியுள்ளனர்.
New South Wales மாநிலத்தில் 60 சத வீத மக்கள் தடுப்பூசியின் ஒரு சுற்றையாவது பெற்றுள்ளார்கள் என்றும், ஆறு மில்லியன் தடுப்பூசிகள் மாநிலத்தில் வழங்கப்பட்டுள்ளது என்றும் Premier Gladys Berejiklian கூறினார்.
தொற்று அதிகமாகப் பரவியுள்ள 12 உள்ளூராட்சிப் பகுதிகளில் 16 முதல் 39 வயதுக்குட்பட்டவர்கள், ஊனமுற்றோர் மற்றும் சிறுவர் பராமரிப்பில் ஈடுபட்டுள்ளோர் தடுப்பூசிகளைப் பெற முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்குக் கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் இந்த வார இறுதியில் அறிவிக்கப்படும்.
தடுப்பூசி எங்கே போடலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்.
விக்டோரியா
விக்டோரியா மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 50 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அதில் 10 பேருக்கு ஏற்பட்ட தொற்று ஏற்கனவே கண்டறியப்பட்ட தொற்றுகளுடன் தொடர்புடையவை அல்ல.
16 வயதுக்கு மேற்பட்டவர்கள் எவரும் நாளை ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் மாநில அரசு நடத்தும் தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி போடலாம் என்று Premier Daniel Andrews கூறினார்.
தொற்று அதிகமாகப் பரவியுள்ள இடங்கள் மற்றும் தடுப்பூசி எங்கே போடலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்.
Australian Capital Territory
ACT பிராந்தியத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 30 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. 17 பேர் தொற்றுடன் சமூகத்தில் நடமாடியுள்ளார்கள்.
Kambah மற்றும் Brindabella Business Park என்ற இடங்களில் இயங்கும் Covid சோதனை தளங்கள் மோசமான வானிலை காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன. அவை இன்று மீண்டும் இயங்க ஆரம்பிக்கும்.
தொற்று அதிகமாகப் பரவியுள்ள இடங்கள் மற்றும் தடுப்பூசி எங்கே போடலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்.
கடந்த 24 மணிநேரத்தில் நாடளாவிய செய்திகளில்:
- குயின்ஸ்லாந்து மாநிலத்தில் புதிதாக இருவருக்கு சமூகப் பரவல் மூலம் தொற்று ஏற்பட்டுள்ளது. தொற்று எப்படி ஏற்பட்டது என்பது விசாரிக்கப்படுகிறது.
- 70 முதல் 80 சதவீதமானவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டால், மக்கள் இயல்பாக நடப்பது சாத்தியம் என்றும், மருத்துவ சுகாதார சேவைகள் சீராக வழங்கப்படும் நிலையில், தொற்றுள்ளவர்கள் எண்ணிக்கை அதிகரித்தாலும் பாதிப்பு அதிகம் இருக்காது என்று Doherty Institute வலியுறுத்துகிறது.
தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்
தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:
NSW பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
VIC பயணம் குறித்த தரவுகள், வெளி நாட்டுப் பயணம் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
ACT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
NT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
QLD பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
SA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
TAS பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
WA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு covid19.homeaffairs.gov.au/leaving-australia என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள் Smart Traveller இணையத்தளத்தில் வெளியாகும்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:
COVID-19 Vaccination Glossary
Appointment Reminder Tool.
Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
