தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக NSWஇல் 1,000ற்கும் அதிகமான தொற்றாளர்கள்

கொரோனா வைரஸ் குறித்து ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்

Vaccination clinic at Olympic Park Sydney, NSW

Source: AAP Image/Bianca De March


 

  • New South Wales மாநிலத்தில் சில அங்கீகரிக்கப்பட்ட தொழிலாளர்கள் தடுப்பூசி போட்டிருக்க வேண்டியது கட்டாயமாக்கப்படுகிறது
  • விக்டோரிய மாநிலத்தில் முடக்கநிலை நீட்டிக்கப்படுகிறது
  • ACT பிராந்தியத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 13 பேருக்குத் தொற்று
  • குயின்ஸ்லாந்து மாநிலத்தில், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் ஒருவருக்கு தொற்று உறுதி

நியூ சவுத் வேல்ஸ்

New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,218 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றுள்ளவர்களில் 887 பேர் சிட்னியின் மேற்கு மற்றும் தென்மேற்கு சிட்னியில் வசிப்பவர்கள்.  தொற்றினால் ஆறு பேர் இறந்துள்ளார்கள்.  தொற்றினால் இதுவரை இறந்தவர்கள் எண்ணிக்கை 145ஆக உயர்ந்துள்ளது.

தொற்று அதிகமாகப் பரவியுள்ள இடங்களில் வசிக்கும் சில அங்கீகரிக்கப்பட்ட தொழிலாளர்கள், செப்டம்பர் 6ஆம் தேதிக்குப் பின்னர் தடுப்பூசியின் ஒரு சுற்றையாவது போட்டிருந்தால் மட்டுமே தொற்று அதிகமாகப் பரவியுள்ள இடங்களுக்கு வெளியில் வேலை செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

தொற்று அதிகமாகப் பரவியுள்ள இடங்களில் வசிக்கும் சில அங்கீகரிக்கப்பட்ட தொழிலாளர்கள், 16 முதல் 49 வயதுடையவர்கள், சிறுவர் பராமரிப்பு, ஊனமுற்றோர் பராமரிப்பு, உணவு உற்பத்தி மற்றும் விநியோகம் என்பவற்றில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் தடுப்பூசி பெற முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி போட்டுக் கொள்ள இங்கே பதிவு செய்யலாம்.


 

விக்டோரியா

விக்டோரியா மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 92 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றுள்ளவர்களில் 30 பேருக்கு தொற்று எப்படி ஏற்பட்டது என்பது தெரியவில்லை.

தற்போது தொற்றுள்ளவர்கள் என்று அடையாளம் காணப்பட்ட 778 பேரில் சுமார் 500 பேர் மெல்பன் நகரின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் வசிக்கிறார்கள் என்றும் முடக்கநிலையை செப்டம்பர் 2ஆம் தேதி முடிவுக்குக் கொண்டுவர முடியாது என்றும் premier Daniel Andrews சுட்டிக்காட்டினார்.

தடுப்பூசி எங்கே போடலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்.


 

கடந்த 24 மணிநேரத்தில் நாடளாவிய செய்திகளில்:

  • குயின்ஸ்லாந்து மாநிலத்தில், Boondall என்ற இடத்திலுள்ள Brisbane Entertainment Centre இல் பாரிய தடுப்பூசி மையம் செப்டம்பர் 8ஆம் தேதி ஆரம்பிக்கிறது
  • TGA அங்கீகரிப்பு வழங்கிய கொரோனா தடுப்பூசியால் கடுமையான பக்க விளைவு ஏற்பட்டால் இழப்பீடு தரப்படும் என்று சுகாதார அமைச்சர் Greg Hunt அறிவித்தார்.


தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

NSW பயணம் குறித்த தரவுகள்  மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

VIC பயணம் குறித்த தரவுகள்வெளி நாட்டுப் பயணம் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

ACT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

NT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

QLD பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

SA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

TAS பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

WA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு covid19.homeaffairs.gov.au/leaving-australia என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்  Smart Traveller இணையத்தளத்தில் வெளியாகும்.


 

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


 

NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:

COVID-19 Vaccination Glossary
Appointment Reminder Tool.


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

NSW 

Victoria 

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania

Northern Territory 


மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

NSW 

Victoria 

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania
Northern Territory


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 


Share

3 min read

Published

Updated

By SBS/ALC Content, Kulasegaram Sanchayan

Source: SBS




Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now