NSW மாநிலத்தில் BA.4 மற்றும் BA.5 துணைத்திரிபுகளால் ஏற்படும் தொற்றுக்கள் அதிகரிப்பு!

கொரோனா வைரஸ் குறித்து ஜுன் மாதம் 17ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

Members of the public queue in their cars for a COVID-19 PCR test in Sydney.

NSW Health believes new variants will drive up COVID-19 cases in coming weeks. (file) Source: AAP Image/Bianca De Marchi

விக்டோரியாவில் 18 பேர், குயின்ஸ்லாந்தில் 11 பேர் மற்றும் நியூ சவுத் வேல்ஸில் 8 பேர் என நாடு முழுவதும் கோவிட் தொடர்பிலான மேலும் 51 இறப்புகள் பதிவாகியுள்ளன.

கடந்த இரண்டு வாரங்களில் NSW மற்றும் குயின்ஸ்லாந்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இருப்பினும், இது விக்டோரியா, தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் டாஸ்மேனியாவில் குறைந்துள்ளது.

தெற்கு ஆஸ்திரேலியர்கள் தங்களது கோவிட்-19 சோதனையுடன் multi-virus test-12 வெவ்வேறு வைரஸ் சோதனைகளையும் மேற்கொள்ளலாம்.  எனினும் multi-virus சோதனைக்காக கோவிட்-19  drive-through கிளினிக்குகள் மற்றும் தனியார் pathology-களை அணுகுவதற்கு முன் GP-இன் பரிந்துரை தேவை.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஓமிக்ரான் திரிபின் BA.4 மற்றும் BA.5 துணைத்திரிபுகளால் ஏற்படும் தொற்றுக்களில் 22 வீத அதிகரிப்பு காணப்படுவதாக NSW Health தெரிவித்துள்ளது. BA.4 மற்றும் BA.5 ஆகியவை ஆதிக்கம் செலுத்தும் திரிபாக மாறும் அதேநேரம், வரவிருக்கும் வாரங்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கையும்  அதிகரிக்கும் என சுகாதார அதிகாரிகள் நம்புகின்றனர்.

விமான நிலையங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற கட்டுப்பாட்டை பெரும்பாலான ஆஸ்திரேலிய மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் இந்த வார இறுதியில் நீக்கவுள்ளன. இருப்பினும், விமானங்களினுள் முகக்கவசம் அணிவது இன்னும் கட்டாயமாக உள்ளது.

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் புதிதாக  8,355 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 8 பேர் மரணமடைந்தனர். 

விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 7,608  பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 18 பேர் மரணமடைந்தனர். 

டஸ்மேனியாவில் புதிதாக 800 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருவர் மரணமடைந்தனர்.

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 4,434 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 11 பேர் மரணமடைந்தனர்.

மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 5,311 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  ஒருவர் மரணமடைந்தார்.

தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 2,807  பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 5 பேர் மரணமடைந்தனர்.

ACT- இல் புதிதாக  962 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 6 பேர் மரணமடைந்தனர்.

NT-இல் புதிதாக  275 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.

ACT   New South Wales   Northern Territory   Queensland   South Australia  Tasmania   Victoria    Western Australia

கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

ACT   New South Wales   Northern Territory   Queensland   South Australia   Tasmania  Victoria   Western Australia 

ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிய: healthdirect.gov.au/covid19

உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு இருக்கும் தெரிவுகள் என்ன என்பதை அறிந்துகொள்ள: servicesaustralia.gov.au

உங்கள் மொழியில் கோவிட்-19-ஐப் புரிந்துகொள்ள சில உதவிகள்: mhcs.health.nsw.gov.au

உங்கள் மொழியில் அனைத்து கோவிட்-19 தகவல்களைப் படிக்க: SBS Coronavirus portal

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


3 min read

Published



Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now