பாடசாலை மாணவர்கள் - NSWஇல் பாடசாலை செல்ல ஆரம்பிக்கிறார்கள், விக்டோரியாவில் தயாராகிறார்கள்

கொரோனா வைரஸ் குறித்து அக்டோபர் மாதம் 18ஆம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

Staff welcome students back to school after COVID-19 restrictions were lifted, at Glebe Public School in Sydney

Staff welcome students back to school after COVID-19 restrictions were lifted, at Glebe Public School in Sydney. Source: AAP/Bianca De Marchi

  • விக்டோரிய மாநிலத்தில் வெளிப்புற இடங்களில் நடத்தப்படும் வணிக நிறுவனங்களுக்கு, மாநில அரசு புதிய நிதி ஆதரவு
  • NSW மாநிலத்தில் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுகின்றன
  • திட்டமிட்டபடி, டாஸ்மேனியா மாநிலத்தில் முடக்கநிலை முடிவுக்கு வருகிறது

விக்டோரியா

விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,903 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றினால் மேலும் ஏழு பேர் உயிரிழந்துள்ளார்கள்.

வெளிப்புற இடங்களில் நடத்தப்படும் உடற்பயிற்சி நிலையங்கள், கடைகள், அழகு நிலையங்கள் மற்றும் வியாபார நிறுவனங்கள் போன்ற வணிக நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்கு நிதி ஆதரவு வழங்குவதற்காக, 54 மில்லியன் டொலர் திட்டம் ஒன்றை வேலைவாய்ப்பு அமைச்சர் Jaala Pulford அறிவித்தார்.

மாநிலத்தில் வாழும் 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களில் 89.2 சதவீதமானவர்கள் தடுப்பூசியின் ஒரு சுற்றைப் போட்டிருக்கிறார்கள், 66.5 சதவீதமானவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் போட்டிருக்கிறார்கள்.

மெல்பன் பெருநகர் மற்றும் விக்டோரிய மாநிலத்தின் பிராந்திய இடங்களில் நடைமுறையிலிருக்கும் முடக்கநிலை  கட்டுப்பாடுகள் எதிர்வரும் வியாழக்கிழமை, அக்டோபர் 21ஆம் தேதி நள்ளிரவுடன் முடிவுக்கு வருகின்றன.  ஆண்டு ஒன்று மற்றும் ஆண்டு இரண்டு மாணவர்கள் அன்று பாடசாலை செல்ல ஆரம்பிப்பார்கள்.  மற்றைய மாணவர்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை, அக்டோபர் 22ஆம் தேதி முதல் மீண்டும் பாடசாலை செல்ல ஆரம்பிப்பார்கள்.

தடுப்பூசி எங்கே போடலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்.


நியூ சவுத் வேல்ஸ்

New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 265 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றினால் மேலும் ஐந்து பேர் உயிரிழந்துள்ளார்கள்.

மாநிலத்தில் வாழும் 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களில் 92 சதவீதமானவர்கள் தடுப்பூசியின் ஒரு சுற்றைப் போட்டிருக்கிறார்கள், 80.3 சதவீதமானவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் போட்டிருக்கிறார்கள்.

ஆண்டு 12, ஆண்டு ஒன்று மற்றும் பாலர் வகுப்பு மாணவர்கள் இன்று பாடசாலைகளுக்குத் திரும்பினார்கள்.  மற்றைய மாணவர்கள் அடுத்த வாரம் பாடசாலை செல்ல ஆரம்பிப்பார்கள்.

தடுப்பூசி போட்டுக் கொள்ள இங்கே பதிவு செய்யலாம்.


Australian Capital Territory

ACTயில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 17 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்று ஏற்பட்டவர்களில் 11 பேருக்குத் தொற்று எங்கிருந்து வந்தது என்பது தெரியும்.

தொற்று கண்டவர்கள் 17 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள், அவர்களில் 9 பேருக்குத் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

தடுப்பூசி போட்டுக் கொள்ள இங்கே பதிவு செய்யலாம்.


கடந்த 24 மணி நேரத்தில்

  • குயின்ஸ்லாந்து மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம் புதிதாக யாருக்கும் தொற்று இருப்பது கண்டறியப்படவில்லை.
  • டாஸ்மேனியா மாநிலத்தில் நடைமுறையிலிருக்கும் முடக்கநிலை கட்டுப்பாடுகள் திட்டமிட்டபடி இன்று மாலை 6 மணிக்கு முடிவுக்கு வருகின்றன.

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

NSW பயணம் குறித்த தரவுகள்  மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

VIC பயணம் குறித்த தரவுகள்வெளி நாட்டுப் பயணம் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

ACT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

NT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

QLD பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

SA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

TAS பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

WA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு covid19.homeaffairs.gov.au/leaving-australia என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்  Smart Traveller இணையத்தளத்தில் வெளியாகும்.


 

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


 

NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:

COVID-19 Vaccination Glossary
Appointment Reminder Tool.


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

NSW 

Victoria 

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania

Northern Territory 


மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

NSW 

Victoria 

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania
Northern Territory


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 


4 min read

Published

Updated

By SBS/ALC Content, Kulasegaram Sanchayan

Source: SBS



Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now