NSW மாணவர்கள் பாடசாலைகளுக்குத் திரும்புகிறார்கள்; விக்டோரியாவில் மேலதிகமானவர்களுக்குத் தடுப்பூசி போட புது முயற்சி

கொரோனா வைரஸ் குறித்து அக்டோபர் மாதம் 25ஆம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

Students of Hunter School of the Performing Arts celebrate their return on campus in Sydney after months of lockdown.

Students of Hunter School of the Performing Arts celebrate their return on campus in Newcastle after months of lockdown. Source: Supplied by Hunter School of the Performing Arts

  • பூர்வீக குடி மக்களுக்குத் தடுப்பூசி வழங்கும் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டது
  • குயின்ஸ்லாந்து மாநில கடற்கரைகளில் தற்காலிக தடுப்பூசி மையங்கள் அமைக்கப்படும்
  • விக்டோரியா மாநிலத்தில் 90 சதவீதமானோர் தடுப்பூசியை முழுமையாகப் போட்டதும் கட்டுப்பாட்டுகள் எப்படி தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது

விக்டோரியா

விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,461 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  வயது இருபதுகளிலுள்ள ஒரு பெண் உட்பட, தொற்றினால் மேலும் ஏழு பேர் உயிரிழந்துள்ளார்கள்.

தடுப்பூசி போடுவது குறித்து மாநிலத்தில் வாழும் பூர்வீக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் புதிய திட்டங்களை மாநில சுகாதார அமைச்சர் Martin Foley அறிவித்தார்.  குறைவான எண்ணிக்கையில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் வாழும் இடங்களில் தற்காலிக தடுப்பூசி (pop-up clinics) மையங்கள் அமைக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

விக்டோரியா மாநிலத்தில் வாழும் பூர்வீக குடி மக்களில் 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பூர்வீக குடி மக்களில் 80 சதவீதமானவர்கள் தடுப்பூசியின் ஒரு சுற்றைப் போட்டுள்ளார்கள்.  மாநிலம் முழுவதிலும் வாழும் மக்களில் 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பூர்வீக குடி மக்களில் 90 சதவீதமானவர்கள் தடுப்பூசியின் ஒரு சுற்றைப் போட்டுள்ளார்கள்.

மாநிலம் முழுவதும் மக்கள் முக கவசம் அணியாமல் வெளி இடங்களில் நடமாடலாம், பிராந்திய இடங்களுக்கு செல்லலாம் என்று பல கட்டுப்பாடுகள் அக்டோபர் 29ஆம் தேதியிலிருந்து தளர்த்தப்படுகின்றன.

தடுப்பூசி எங்கே போடலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்.


நியூ சவுத் வேல்ஸ்

New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 294 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றினால் மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

அனைத்து பாடசாலை மாணவர்களும் இன்று முதல் பாடசாலைகளுக்குத் திரும்புகிறார்கள்.  இருந்தாலும், ஆசிரியர்கள் தடுப்பூசியை முழுமையாகப் போட்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருப்பதால் அனைத்து ஆசிரியர்களும் பாடசாலைகளுக்குத் திரும்பவில்லை.

95 சதவீதமான ஆசிரியர்கள் தடுப்பூசியை முழுமையாகப் போட்டிருப்பதால் பாடசாலைகளுக்குப் பாதுகாப்பாக மாணவர்கள் செல்ல முடிகிறது என்று Premier Dominic Perrottet ஆசிரியர்களைப் பாராட்டினார்.

சிட்னி பெரு நகரிலுள்ள அரச மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இடை நிறுத்தப்பட்டிருந்த அனைத்து அறுவை சிகிச்சைகளும் மீண்டும் ஆரம்பிக்கின்றன.

தடுப்பூசி போட்டுக் கொள்ள இங்கே பதிவு செய்யலாம்.


குயின்ஸ்லாந்து

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம் புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை.

தடுப்பூசி போட்டுக் கொள்ள இங்கே பதிவு செய்யலாம்.


கடந்த 24 மணி நேரத்தில்

  • ACTயில் சமூகப் பரவல் மூலம் புதிதாக ஒன்பது பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது.
  • வீட்டிலேயே 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் திட்டம் Northern Territory பிராந்தியத்தில் நான்கு வாரங்களுக்குப் பரீட்சித்துப் பார்க்கவுள்ளது.
  • நாட்டு மக்களுக்கு, booster dose எனப்படும் மூன்றாவது சுற்று தடுப்பூசி வழங்குவது குறித்து, COVID-19 தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்ற உருவாக்கப்பட்ட பணிக்குழுவின் தலைவர் Lt. General John Frewen கருத்து வெளியிட்டார்.  தடுப்பூசி குறித்த ஆலோசனை வழங்கும் ATAGI குழு பரிந்துரைத்தால், தடுப்பூசியின் இரண்டாவது சுற்று போட்டதற்கு ஆறு மாதங்களின் பின்னர் மூன்றாவது சுற்று தடுப்பூசி வழங்கப்படும் என்று Lt. General John Frewen கூறினார்.

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

NSW பயணம் குறித்த தரவுகள்  மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

VIC பயணம் குறித்த தரவுகள்வெளி நாட்டுப் பயணம் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

ACT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

NT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

QLD பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

SA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

TAS பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

WA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு covid19.homeaffairs.gov.au/leaving-australia என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்  Smart Traveller இணையத்தளத்தில் வெளியாகும்.


 

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


 

NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:

COVID-19 Vaccination Glossary
Appointment Reminder Tool.


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

NSW 

Victoria 

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania

Northern Territory 


மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

NSW 

Victoria 

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania
Northern Territory


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 


Share

4 min read

Published

Updated

By SBS/ALC Content, Kulasegaram Sanchayan

Source: SBS




Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now