- வீட்டிலேயே Covid சோதனை செய்ய TGA அனுமதி
- விக்டோரிய மாநிலத்தில் மிக அதிகமான தொற்றாளர்கள்
- NRL இறுதிப் போட்டி நடக்க சில நாட்களே உள்ள வேளையில் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் இரண்டு இடங்களில் தொற்று அதிகமாகப் பரவுகிறது
விக்டோரியா
விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 867 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் நான்கு பேர் இறந்துள்ளனர். தற்போதுள்ள தொற்றாளர்கள் எண்ணிக்கை 9,261.
வெளி நாடுகளிலிருந்தும் பிற மாநிலங்களிலிருந்தும் விக்டோரிய மாநிலம் திரும்புபவர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க புதிய செயலி ஒன்று அறிமுகமாகிறது.
தடுப்பூசி எங்கே போடலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்.
குயின்ஸ்லாந்து
NRL இறுதிப் போட்டி நடக்க சில நாட்களே உள்ள வேளையில் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் இரண்டு இடங்களில் தொற்று அதிகமாகப் பரவியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஒரு கனரக வாகன ஓட்டி தொற்றுடன் சமூகத்தில் எட்டு நாட்கள் நடமாடியுள்ளார்.
குயின்ஸ்லாந்து மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக நான்கு பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. Brisbane மற்றும் Moreton Bay உள்ளூராட்சிப் பகுதிகளில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது.
தடுப்பூசி எங்கே போடலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்.
நியூ சவுத் வேல்ஸ்
New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 863 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் ஏழு பேர் இறந்துள்ளார்கள். அதிகளவிலாக அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் சிட்னியின் தென் மேற்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் வசிப்பவர்கள்.
தொற்று வேகமாகப் பரவுவதால், Port Macquarie மற்றும் Muswellbrook பகுதிகளில் முடக்கநிலை அறிவிக்க வேண்டுமா என்றும் Kempsey பகுதியில் முடக்கநிலையை நீட்டிக்க வேண்டுமா என்றும் அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்
தடுப்பூசி போட்டுக் கொள்ள இங்கே பதிவு செய்யலாம்.
Australian Capital Territory
ACTயில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 13 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்று கண்ட எட்டுப் பேர் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அதில் மூன்று பேருக்கு சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
ACTயில் முடக்கநிலை கட்டுப்பாடுகள் படிப்படியாகத்தான் தளர்த்தப்படும் என்று Chief Minister Andrew Barr கூறினார்.
தடுப்பூசி போட்டுக் கொள்ள இங்கே பதிவு செய்யலாம்.
கடந்த 24 மணி நேரத்தில்
- Covid சோதனையை இனி வீட்டிலேயே செய்யும் வழி நவம்பர் முதலாம் தேதி முதல் அறிமுகமாகும் என்று மருந்துகளைக் கட்டுப்படுத்தும் TGA அறிவித்தது.
தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்
தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:
NSW பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
VIC பயணம் குறித்த தரவுகள், வெளி நாட்டுப் பயணம் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
ACT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
NT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
QLD பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
SA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
TAS பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
WA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு covid19.homeaffairs.gov.au/leaving-australia என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள் Smart Traveller இணையத்தளத்தில் வெளியாகும்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:
COVID-19 Vaccination Glossary
Appointment Reminder Tool.
Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
