நாட்டில் 16 வயதிற்கும் மேற்பட்டவர்களில் 70 சதவீதமானவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் போட்டு விட்டார்கள்

கொரோனா வைரஸ் குறித்து அக்டோபர் மாதம் 20ஆம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

Australian Health Minister Greg Hunt (left) and Australia’s Chief Medical Officer Paul Kelly speak to the media during a press conference at Parliament House in Canberra, Wednesday, October 20, 2021. (AAP Image/Lukas Coch) NO ARCHIVING

Health Minister Greg Hunt (left) and Chief Medical Officer Paul Kelly during a press conference at Parliament House in Canberra, Wednesday, October 20, 2021. Source: AAP Image/Lukas Coch

  • NSW மாநிலத்துடனான எல்லைக் கட்டுப்பாடுகளை விக்டோரிய மாநிலம் நீக்கியது
  • NSW மாநிலத்தில் அனைத்து அறுவைச் சிகிச்சைகளும் மீண்டும் தொடங்குகின்றன
  • ACTஇல் சமூகப் பரவல் மூலம், புதிதாக 24 பேருக்குத் தொற்று

விக்டோரியா

விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,841 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றினால் மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளார்கள்.  தற்போது 22,598 பேருக்குத் தொற்று இருக்கிறது.

தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டவர்கள் விக்டோரியா மாநிலம் சென்றால் தனிமைப் படுத்தப்பட்டிருக்க வேண்டியதில்லை.

Blue Mountains, Central Coast, Shellharbour மற்றும் Wollongong பகுதிகள் உள்ளிட்ட சிட்னி பெருநகர் பகுதி வாழ் மக்கள் விக்டோரியா மாநிலம் செல்ல orange zone permit என்ற அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொள்ளாமல் விக்டோரியா மாநிலம் செல்பவர்கள் தனிமைப் படுத்தப்பட்டிருக்க வேண்டும், மாநிலம் சென்ற 72 மணி நேரத்திற்குள் Covid சோதனை செய்து விட்டு, தொற்று இல்லை என்ற முடிவு வரும் வரை தனிமைப் படுத்தப்பட்டிருக்க வேண்டும்.


நியூ சவுத் வேல்ஸ்

New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 283 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றினால் மேலும் ஏழு பேர் உயிரிழந்துள்ளார்கள்.

COVID-19 தொற்று வேகமாகப் பரவியதால் இரண்டு மாதங்களாக இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அவசரமாகச் செய்யத் தேவையில்லாத (non-urgent elective) அறுவை சிகிச்சைகள் அடுத்த வாரம் முதல் சிட்னி பெரு நகரில் மீண்டும் தொடங்குகின்றன.

Nepean Blue Mountains பகுதி உள்ளிட்ட, சிட்னி பெரு நகர் பகுதிகளிலுள்ள தனியார் மற்றும் பொது மருத்துவ சிகிச்சை நிலையங்களுக்கு அனுமதிக்கப் படக் கூடியவர்களில் 75 சதவீதமானவர்கள் மட்டுமே அடுத்த திங்கட்கிழமை முதல் அறுவை சிகிச்சைகள் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.


கடந்த 24 மணி நேரத்தில்

  • ACTயில் ஊனமுற்றோர் மற்றும் முதியோருக்கு சேவை வழங்குவோர் கட்டாயமாகத் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனை நடைமுறைக்கு வருகிறது என்று ACT பிராந்திய அரசு அறிவித்துள்ளது.
  • நாட்டில் 16 வயதிற்கும் மேற்பட்டவர்களில் 70 சதவீதமானவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் போட்டு விட்டார்கள் என்றும் எல்லைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கான முதல் இலக்கை அடைந்து விட்டோம் என்றும் சுகாதார அமைச்சர் Greg Hunt அறிவித்தார்.

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு covid19.homeaffairs.gov.au/leaving-australia என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்  Smart Traveller இணையத்தளத்தில் வெளியாகும்.


 

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


 

NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

NSW 
ACT 

மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

NSW 
ACT 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 


Share

Published

Updated

By SBS/ALC Content, Kulasegaram Sanchayan
Source: SBS

Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand