- NSW மாநிலத்தில் 59.25 சதவீத மக்கள் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுள்ளார்கள்
- விக்டோரிய மாநிலத்தில் Geelong மற்றும் Surf Coast முடக்கநிலை இன்று நள்ளிரவு முடிகிறது
- ACTயில் புதிதாக 25 பேருக்குத் தொற்று உறுதி
நியூ சவுத் வேல்ஸ்
New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 961 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் ஒன்பது பேர் இறந்துள்ளார்கள்.
Guildford, Auburn, Punchbowl, Penrith, Bankstown, Liverpool மற்றும் Bossley Park ஆகிய இடங்களில் தொற்று அதிகமாகப் பரவியுள்ளது என்று மாநில சுகாதாரத் துறையின் Dr Jeremy McAnulty கூறினார்.
முடக்க நிலை கட்டுப்பாடுகள் எவ்வாறு எப்போது நீக்கப்படும் என்ற திட்டம் அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்றும், தடுப்பூசி போடாதவர்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் அதன் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் Premier Gladys Berejiklian கூறினார்.
தடுப்பூசி போட்டுக் கொள்ள இங்கே பதிவு செய்யலாம்.
விக்டோரியா
விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 779 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் இருவர் இறந்துள்ளனர்.
விக்டோரிய மாநிலத்தில் 16 வயதிற்கும் மேற்பட்டவர்களில் 80 சதவீதமானவர்கள் தடுப்பூசியின் ஒரு சுற்றைப் போட்டதன் பின்னர் மெல்பன் மற்றும் மாநிலத்தின் பிராந்திய பகுதிகளில் முடக்க நிலை கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்றும் Premier Daniel Andrews அறிவித்தார். இந்த இலக்கு, செப்டம்பர் 28ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருவர் தனது வீட்டிலிருந்து பயணிக்க அனுமதிக்கப்பட்டிருக்கும் தூர எல்லை 15 கிலோமீட்டராக அதிகரிக்கப்படும். உடற்பயிற்சி செய்யவும், golf, tennis மற்றும் basketball போன்ற விளையாட்டுகள் விளையாடவும் அனுமதி வழங்கப்படும்.
தடுப்பூசி எங்கே போடலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்.
கடந்த 24 மணிநேரத்தில்
- ACTயில் 12 வயதிற்கு மேற்பட்டோரில் 85 சதவீதமானோர் தடுப்பூசியின் ஒரு சுற்றைப் போட்டுள்ளார்கள்.
- குயின்ஸ்லாந்து மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம் யாருக்கும் தொற்று ஏற்படவில்லை.
தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:
NSW பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
VIC பயணம் குறித்த தரவுகள், வெளி நாட்டுப் பயணம் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
ACT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
NT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
QLD பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
SA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
TAS பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
WA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு covid19.homeaffairs.gov.au/leaving-australia என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள் Smart Traveller இணையத்தளத்தில் வெளியாகும்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:
COVID-19 Vaccination Glossary
Appointment Reminder Tool.
Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
