குயின்ஸ்லாந்து மாநிலத்தில் கோவிட் கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வு!

கொரோனா வைரஸ் குறித்து ஜுன் மாதம் 24ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

People are seen lined up to receive a vaccination for COVID-19 at the Boondall mass vaccination hub in Brisbane, Saturday, September 18, 2021. Queenslanders aged 12 and over are urged to make the most of a state-wide vaccination blitz this weekend, with 3

People are seen lined up to receive a vaccination for COVID-19. Source: (AAP Image/Darren England

விக்டோரியாவில் 20 பேர், குயின்ஸ்லாந்தில் 6 பேர் மற்றும் நியூ சவுத் வேல்ஸில் 14 பேர் என நாடு முழுவதும் கோவிட் தொடர்பிலான மேலும் 46 இறப்புகள் பதிவாகியுள்ளன.

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் கோவிட் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், அம்மாநில அரசு அங்கு நடைமுறையிலுள்ள கோவிட் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது.

ஜூன் 30 அதிகாலை 1 மணி முதல், முதியோர் பராமரிப்பு மையங்கள், ஊனமுற்றோர் பராமரிப்பு மையங்கள் மற்றும் சிறைச்சாலைகளுக்குச் செல்பவர்கள், கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை.

மேலும், early childhood, ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வி மையங்கள் சிறைச்சாலைகள், இளைஞர் தடுப்பு மையங்கள், கண்காணிப்பு மையங்கள் மற்றும் விமான நிலையங்கள் உட்பட அதிக ஆபத்துள்ள அமைப்புகளில் உள்ள தொழிலாளர்களும் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை.  (அவர்களுடைய முதலாளி அதைக் கோரினாலேயன்றி)

ஆனால் சுகாதாரத்துறை, மருத்துவமனைகள், முதியோர் பராமரிப்பு மையங்கள் மற்றும் ஊனமுற்றோர் பராமரிப்பு மையங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டுமென்று  Premier Annastacia Palaszczuk தெரிவித்தார்.

ஜூன் 30 முதல் சர்வதேச பயணிகளுக்கான கோவிட்-19 சோதனை நிபந்தனைகள் நீக்கப்பட்டுள்ளன. குயின்ஸ்லாந்திற்கு வந்த 24 மணி நேரத்திற்குள், சர்வதேச பயணிகள் கோவிட்சோதனையை மேற்கொள்ள  வேண்டும்.

ஜூன் 18ஆம் தேதியுடன் முடிவடையும் வாராந்திர அறிக்கையில், கடந்த வாரத்தில் BA.4 மற்றும் BA.5 மாதிரிகளின் விகிதம் 23 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக அதிகரித்துள்ளதாக NSW Health குறிப்பிட்டுள்ளது.

கடந்த வாரம் பதிவான 77 கோவிட் இறப்புகளில், 56 (73%) பேர் மட்டுமே மூன்றாவது தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

வாரத்தில் ஏழு நாட்களும் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை Burnie COVID-19 testing கிளினிக்கிலிருந்து Rapid Antigen Test (RAT)-ஐ பெற்றுக்கொள்ளலாம் என்று டாஸ்மேனிய அரசு கூறியுள்ளது.

மேற்கு ஆஸ்திரேலியா Fiona Stanley Hospital, Armadale Health Service, Sir Charles Gairdner மருத்துவமனை மற்றும் St John of God Midland பொது மருத்துவமனை ஆகியவற்றில் உள்ள கோவிட்-19 சோதனை கிளினிக்குகளை ஜூலை 15 முதல் மூடுகிறது.

இருப்பினும் மாநிலம் முழுவதும் 60 க்கும் மேற்பட்ட மையங்கள் மற்றும் தனியார் pathology-களில் இலவச PCR சோதனை வசதி கிடைக்கும்.

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் புதிதாக  9,136 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 14 பேர் மரணமடைந்தனர். 

விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 7,723  பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 20 பேர் மரணமடைந்தனர். 

டஸ்மேனியாவில் புதிதாக 1018 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் மரணமடைந்தார்.

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 4,520 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 6 பேர் மரணமடைந்தனர்.

மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 4,749 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  ஒருவர் மரணமடைந்தார்.

தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 2,311  பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 4 பேர் மரணமடைந்தனர்.

ACT- இல் புதிதாக  1039 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

NT-இல் புதிதாக  248 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.

கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிய: healthdirect.gov.au/covid19

உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு இருக்கும் தெரிவுகள் என்ன என்பதை அறிந்துகொள்ள: servicesaustralia.gov.au

உங்கள் மொழியில் கோவிட்-19-ஐப் புரிந்துகொள்ள சில உதவிகள்: mhcs.health.nsw.gov.au

உங்கள் மொழியில் அனைத்து கோவிட்-19 தகவல்களைப் படிக்க: SBS Coronavirus portal

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

Published


Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand