தடுப்பூசி போட்டுக்கொண்ட உள்நாட்டுப் பயணிகளுக்கு குயின்ஸ்லாந்து எல்லை திறக்கப்படுகிறது!

கொரோனா வைரஸ் குறித்து நவம்பர் மாதம் 15ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

Queensland is opening its border to fully vaccinated domestic travellers

A Virgin Australia plane is seen on approach into Brisbane airport. Source: AAP

  • முழுமையாக கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்ட உள்நாட்டுப் பயணிகள், இன்று மாலை 5 மணி முதல், விமானம் மூலம் குயின்ஸ்லாந்து வரமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவர்கள் அனைவரும் விமானப்பயணத்திற்கு 72 மணித்தியாலங்களுக்குள் கோவிட் சோதனையை மேற்கொண்டு, தமக்கு தொற்று இல்லை என்ற சான்றிதழுடன் வரவேண்டும். அத்துடன் குயின்ஸ்லாந்தில் 14 நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தலுக்கும் உள்ளாக வேண்டும். மாநிலத்திலுள்ள 16 வயதிற்கு மேற்பட்டவர்களில், 70 சதவீதமானோர் முழுமையாகத் தடுப்பூசி பெற்றுள்ளனர். இந்த இலக்கு நேற்றையதினம் எட்டப்பட்டது.
  • தெற்கு ஆஸ்திரேலியாவில் 80 சதவீதமானவர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டபின் மாநிலம் தழுவிய COVID-19 முடக்கநிலை நடைமுறைப்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 80 சதவீத இலக்கு அடுத்த வாரம் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • விக்டோரியா மாநில அரசு இந்த வாரம் kindergartens மற்றும் long daycare மையங்களுக்கு இலவச rapid antigen testing kits-ஐ வழங்குகிறது. இது  early childhood சேவைகளில் COVID-19 பரவலை நிர்வகிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 860 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 165 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

NSW பயணம் குறித்த தரவுகள்  மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

VIC பயணம் குறித்த தரவுகள்வெளி நாட்டுப் பயணம் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

ACT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

NT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

QLD பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

SA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

TAS பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

WA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது குறித்த விபரங்களுக்கு covid19.homeaffairs.gov.au/leaving-australia என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்  Smart Traveller இணையத்தளத்தில் வெளியாகும்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:

COVID-19 Vaccination Glossary
Appointment Reminder Tool.


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

NSW 

Victoria 

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania

Northern Territory 


மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

NSW 

Victoria 

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania
Northern Territory


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

3 min read

Published

Updated

By SBS/ALC Content

Source: SBS




Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now