விக்டோரியா மற்றும் குயின்ஸ்லாந்திலும் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கொரோனா வைரஸ் குறித்து ஜனவரி மாதம் 4 ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

sydney testing aap

Health care workers collect information from members of the public as they queue in their cars for a COVID-19 PCR test at the St Vincent’s Drive-through Clinic. Source: Credit: AAP Image/Bianca De Marchi

  • நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கோவிட்-19 காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது 1,344 கோவிட் தொற்றாளர்கள் NSW மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 105 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளனர்.
  • கோவிட் பரவல் தொடர்ந்தும் அதிகரித்துவரும் பின்னணியில், புதிய பள்ளி ஆண்டு ஆரம்பிப்பதற்கு முன்னதாக, மாணவர்களின் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடவென, சுகாதார மற்றும் கல்வியமைச்சு அதிகாரிகளுடன் அவசர கூட்டத்திற்கு NSW ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
  • இன்று முதல் booster தடுப்பூசிக்கான கால இடைவெளி நான்கு மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கிட்டத்தட்ட 7.5 மில்லியன் ஆஸ்திரேலியர்கள் தமக்கான booster தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தகுதிபெறுகின்றனர்.
  • Rapid antigen சோதனை வசதியை அரசு இலவசமாக வழங்கவேண்டுமென்ற விவாதங்கள் வலுத்துவரும் நிலையில், இதன் மீதான GST-ஐ ரத்து செய்யுமாறும், இதன்மூலம் rapid antigen test kits-இன் விலைகளைக் குறைக்கமுடியுமெனவும் Chemist Warehouse நிர்வாகி Mario Tascone அரசுக்கு அழைப்புவிடுத்துள்ளார். 
  • குயின்ஸ்லாந்து மாநிலத்தில், நேற்று திங்களன்று பரிசோதிக்கப்பட்ட swab-களில், 23 சதவீதம் நேர்மறையாக இருந்ததாக மாநில தலைமை சுகாதார அதிகாரி Dr John Gerrard தெரிவித்துள்ளார்.
  • சமீபத்திய தரவுகளின்படி, அமெரிக்காவில் கிட்டத்தட்ட நான்கு மாதங்களில் முதன்முறையாக 100,000 க்கும் அதிகமான மக்கள் தற்போது கோவிட் தொற்றுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சமூகப்பரவல் ஊடாக புதிதாக 23,131 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருவர் மரணமடைந்தனர்.

விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 14,020 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  இருவர் மரணமடைந்தனர்.

டாஸ்மேனிய மாநிலத்தில் புதிதாக 702 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

ACT-இல் புதிதாக 926 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 5,699 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

NSW பயணம் குறித்த தரவுகள்  மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

VIC பயணம் குறித்த தரவுகள்வெளி நாட்டுப் பயணம் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

ACT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

NT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

QLD பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

SA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

TAS பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

WA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது குறித்த விபரங்களுக்கு covid19.homeaffairs.gov.au/leaving-australia என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்  Smart Traveller இணையத்தளத்தில் வெளியாகும்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:

COVID-19 Vaccination Glossary
Appointment Reminder Tool.


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

NSW 

Victoria 

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania

Northern Territory 


மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

NSW 

Victoria 

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania
Northern Territory


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

3 min read

Published

Updated




Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now