- NSW மாநிலத்தில் தொற்று அதிகமாகப் பரவிய உள்ளூராட்சி பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்கின்றன
- விக்டோரிய மாநிலத்தில் கட்டுப்பாடுகள் எப்படி தளர்த்தப்படும் என்ற திட்டம் வெளியிடப்பட்டது
- ஒரே நாளில் மிக அதிகப்படியானவர்களுக்கு தடுப்பூசி வழங்கிய சாதனை புரிந்துள்ளது குயின்ஸ்லாந்து மாநிலம்
நியூ சவுத் வேல்ஸ்
New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,083 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் 13 பேர் இறந்துள்ளார்கள்.
NSW மாநிலத்தில் தொற்று அதிகமாகப் பரவிய உள்ளூராட்சிப் பகுதிகளில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் எதிர்வரும் திங்கட்கிழமை, செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் தளர்த்தப்படுகிறது. சிட்னியின் அனைத்து இடங்களிலும் ஒரே கட்டுப்பாட்டு விதிகள் நடைமுறையில் இருக்கும் என்று Premier Gladys Berejiklian அறிவித்தார். ஆனால், அங்கீகரிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கான கட்டுப்பாடுகள் மற்றும் பயண அனுமதிகள் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும்.
NSW மாநிலம் முழுவதும் உள்ள COVID-safe plan என்ற பாதுகாப்பாக செயல்படக்கூடிய வெளியிட நீச்சல் தடாகங்கள் செப்டம்பர் 20 ஆம் தேதி, திங்கட்கிழமை முதல் மக்கள் பாவனைக்கு வரும்.
மாநிலத்திலுள்ளவர்களில் தடுப்பூசி போட்டுக் கொள்ளத் தகுதி வாய்ந்தவர்களில் 81.9 சதவீதத்தினர் ஒரு சுற்று தடுப்பூசியும் 51.9 சதவீதத்தினர் தடுப்பூசியை முழுமையாகவும் பெற்றுள்ளனர்.
தடுப்பூசி போட்டுக் கொள்ள இங்கே பதிவு செய்யலாம்.
விக்டோரியா
விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 507 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் ஒருவர் இறந்துள்ளார்.
விக்டோரிய மாநிலத்தில் முடக்கநிலை கட்டுப்பாடுகள் எப்போது முழுமையாக நீக்கப்படும் என்று Premier Daniel Andrews விவரித்தார். ஐந்து கட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் திட்டம் எத்தனை சதவீதமானவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்கள் என்பதில் தங்கியுள்ளது. 70 சதவீதத்தினர் தடுப்பூசியை முழுமையாகவும் பெற்றவுடன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் (இந்த இலக்கு அக்டோபர் 26ஆம் தேதி எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது). 80 சதவீதத்தினர் தடுப்பூசியை முழுமையாகவும் பெற்றவுடன் 30 விருந்தாளிகள் வீடுகளில் கூட முடியும் (இந்த இலக்கு கிறிஸ்மஸ் தினத்தன்று எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது).
மாநிலத்திலுள்ளவர்களில் தடுப்பூசி போட்டுக் கொள்ளத் தகுதி வாய்ந்தவர்களில் 71.2 சதவீதத்தினர் ஒரு சுற்று தடுப்பூசியும் 43.5 சதவீதத்தினர் தடுப்பூசியை முழுமையாகவும் பெற்றுள்ளனர்.
தடுப்பூசி எங்கே போடலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்.
கடந்த 24 மணி நேரத்தில்
- ACTயில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 17 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. 12 பேர் தொற்றுடன் சமூகத்தில் நடமாடியுள்ளனர்.
- குயின்ஸ்லாந்து மாநிலத்தில் 31,004 பேர் நேற்று தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள். மாநிலத்திலுள்ளவர்களில் தடுப்பூசி போட்டுக் கொள்ளத் தகுதி வாய்ந்தவர்களில் 59.34 சதவீதத்தினர் ஒரு சுற்று தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.
தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்
தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:
NSW பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
VIC பயணம் குறித்த தரவுகள், வெளி நாட்டுப் பயணம் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
ACT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
NT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
QLD பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
SA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
TAS பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
WA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு covid19.homeaffairs.gov.au/leaving-australia என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள் Smart Traveller இணையத்தளத்தில் வெளியாகும்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:
COVID-19 Vaccination Glossary
Appointment Reminder Tool.
Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
