- ஆஸ்திரேலியாவில் குளிர்காலத்தில் தொற்றுநோய் பரவல் அதிகரிக்கலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளநிலையில், நான்காவது சுற்று கோவிட்-19 தடுப்பூசியை(இரண்டாவது booster ) பெறவேண்டுமா என்பது தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.
- 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, நான்காவது சுற்று தடுப்பூசி, இம்மாத இறுதிக்குள் பரிந்துரைக்கப்படலாம் என்று சுகாதார அமைச்சர் Greg Hunt தெரிவித்துள்ளார்.
- Concession card வைத்திருப்பவர்களுக்கு இலவச antigen சோதனை உபகரணங்களை வழங்கும் திட்டம் இந்த ஆண்டு ஜூலை இறுதி வரை நீட்டிக்கப்படும் என்றும் அமைச்சர் Greg Hunt கூறியுள்ளார்.
- இத்திட்டத்தின்கீழ் Commonwealth Seniors Health Card. Health Care Card, Low Income Health Care Card, Pensioner Concession Card மற்றும் Department of Veterans’ Affairs Gold, White அல்லது Orange Card வைத்திருப்பவர்கள் மூன்று மாத காலப்பகுதிக்குள் 10 இலவச RAT உபகரணங்களைப் பெறலாம்.
- புதிய Omicron துணை திரிபு BA.2 காரணமாக கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை, ஆறு வாரங்களில் இரண்டுமடங்குக்கு மேல் அதிகரிக்கலாம் என நியூ சவுத் வேல்ஸ் சுகாதார அமைச்சர் Brad Hazzard தெரிவித்துள்ளார்.
- BA.2 துணை திரிபு Nextstrain clade 21L என்றும் அறியப்படுகிறது. இது சமீபத்தில் NSWஇல் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் திரிபாக மாறியுள்ளது.
- தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தரவுகளின் அடிப்படையில் BA.1-க்கும் தற்போது பரவிவரும் BA.2-க்கும் இடையில் அவற்றின் தீவிரத்தன்மை தொடர்பில் எந்த வித்தியாசமும் இல்லை என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.
COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்
NSW, விக்டோரியா, ACT மற்றும் குயின்ஸ்லாந்தில் கோவிட் தொடர்பிலான மேலும் 28 இறப்புகள் பதிவாகியுள்ளன.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மேலும் 14,034 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 7 பேர் மரணமடைந்தனர்.998 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 39 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 6,811 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 10 பேர் மரணமடைந்தனர். 185 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 30 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 4,327 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 8 பேர் மரணமடைந்தனர். 250 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 16 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
டஸ்மேனியாவில் புதிதாக 1,129 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 16 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.
ACT- இல் புதிதாக 791 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 3 பேர் மரணமடைந்தனர். 31 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.
Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.
ACT New South Wales Northern Territory Queensland South Australia Tasmania Victoria Western Australia
கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
ACT New South Wales Northern Territory Queensland South Australia Tasmania Victoria Western Australia
ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிய: healthdirect.gov.au/covid19
உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு இருக்கும் தெரிவுகள் என்ன என்பதை அறிந்துகொள்ள: servicesaustralia.gov.au
உங்கள் மொழியில் அனைத்து கோவிட்-19 தகவல்களைப் படிக்க: SBS Coronavirus portal
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.