- விக்டோரிய மாநிலத்தில் 80 சதவீதமானவர்கள் Covid தடுப்பூசியின் முதல் சுற்று போட்டு விட்டார்கள்
- NSW மாநில பாடசாலைகள் திட்டமிட்டதற்கு ஒரு வாரம் முன்னரே திறக்கப்படுகின்றன
- ACTயில் கட்டுப்பாடுகள் இன்றிரவு தளர்த்தப்படுகிறது
- குயின்ஸ்லாந்து மாநிலத்தில் புதிதாக ஆறு பேருக்குத் தொற்று
விக்டோரியா
விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,438 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதில் 500ற்கும் மேற்பட்டவர்களுக்கு ஏற்பட்ட தொற்று AFL இறுதிச் சுற்றுப் போட்டியைக் காண்பதற்குக் கூடிய மக்களுடன் தொடர்புடையது. தொற்றினால் மேலும் ஐந்து பேர் இறந்துள்ளனர்.
தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் விக்டோரிய மாநிலத்தின் முடக்க நிலை கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதில் தாமதம் ஏற்படும் என்று மாநில Covid-19 கட்டுப்பாட்டு ஆணையர் Jeroen Weimar எச்சரித்தார்.
ஃபைசர் தடுப்பூசியின் முதலாம் சுற்று போட்டதன் பின்னர், ஆறு வாரங்கள் என்றிருந்த இரண்டாம் சுற்று போடுவதற்கான கால இடைவெளி, மூன்று வாரங்கள் என குறைக்கப்படுவதாக Premier Daniel Andrews கூறினார். அடுத்த மாதம் அறிமுகமாகும் இந்த மாற்றத்துக்குத் தேவையான அளவு தடுப்பூசி மாநிலத்தில் கிடைக்கிறது என்று அவர் மேலும் கூறினார்.
நியூ சவுத் வேல்ஸ்
New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 941 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் ஆறு பேர் இறந்துள்ளார்கள்.
முன்னர் அறிவித்ததற்கு ஒரு வாரம் முன்னதாகவே பாலர் வகுப்பு, ஆண்டு 1 மற்றும் 12 மாணவர்கள் பாடசாலைகளுக்குத் திரும்பலாம் என்று Premier Gladys Berejiklian கூறினார்.
மற்றைய மாணவர்கள் அதற்கடுத்த இரண்டு வாரங்களில் - அக்டோபர் 25 மற்றும் நவம்பர் 1, பாடசாலைகளுக்குத் திரும்புவார்கள்.
Australian Capital Territory
ACTயில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 31 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
வெளி இடங்களில் மக்கள் பொழுது போக்கும் நேரம் நீட்டிக்கப்படுகிறது, தேசிய பூங்காக்கள் மீண்டும் திறக்கப்படுகின்றன, சில சில்லறை வியாபாரங்கள் மேலதிக சேவை வழங்க அனுமதி, போன்ற பல முடக்கநிலை கட்டுப்பாட்டு நடைமுறைகள் இன்று நள்ளிரவு (வெள்ளி அதிகாலை 12:01) முதல் தளர்த்தப்படுகின்றன.
அறுபது வயதிற்கு மேற்பட்டவர்களும் இனி ஃபைசர் தடுப்பூசி போடலாம்.
கடந்த 24 மணி நேரத்தில்
- Brisbane, Gold Coast, Logan, Moreton Bay, Townsville மற்றும் Palm Island உள்ளூராட்சிப் பகுதிகளில் இன்று மாலை (செப்டம்பர் 30ஆம் தேதி, வியாழக்கிழமை) 4 மணி முதல் இரண்டாம் கட்ட முடக்க நிலை நடைமுறைக்கு வருகிறது.
- நாட்டில் 80 சதவீதமானவர்கள் Covid தடுப்பூசி போட்டதும், வேலை இழந்தவர்களுக்கும், வணிகங்களுக்கும் வழங்கப்பட்ட ஆதரவுத் தொகை நிறுத்தப்படும்.
தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்
தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:
ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு covid19.homeaffairs.gov.au/leaving-australia என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள் Smart Traveller இணையத்தளத்தில் வெளியாகும்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:
Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.