விக்டோரியா மாநிலத்தில் elective surgery மீண்டும் ஆரம்பமாகிறது!

கொரோனா வைரஸ் குறித்து பெப்ரவரி மாதம் 4ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

Victorian Health Minister Martin Foley speaks to media at the Alfred Hospital in Melbourne, Wednesday, December 29, 2021. Victoria has seen a massive jump in COVID-19 infections with 3767 new cases and five deaths. (AAP Image/Con Chronis) NO ARCHIVING

Victorian Health Minister Martin Foley speaks to media. Source: AAP

  • சில குறிப்பிட்ட elective surgery-களை திங்கட்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்கலாம் என விக்டோரிய அரசு அறிவித்துள்ளது. ஆனால் இதனை முழுமையாக மீண்டும் தொடங்குவதற்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
  • விக்டோரிய மாநிலத்தின் சுகாதார துறைக்கு உதவும்வகையில்  $1.4 பில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக சுகாதார அமைச்சர் Martin Foley அறிவித்துள்ளார்.
  • NSW மாநிலத்தில் கோவிட் தொடர்பான மேலும் 31 இறப்புகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. விக்டோரியாவில் 36 இறப்புகள் பதிவாகியுள்ளன. எனினும் இரு மாநிலங்களிலும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.
  • முதியோர் பராமரிப்பு மையங்களிலுள்ளவர்களில் 45,000 பேர் இன்னமும் booster தடுப்பூசியைப் பெறவில்லை என சுகாதார அமைச்சர் Greg Hunt தெரிவித்துள்ளார்.
  • அவர்கள் மத்தியில் காணப்படும் தயக்கமே குறைந்தளவு booster தடுப்பூசி விகிதத்திற்கு காரணி என அமைச்சர் Hunt தெரிவித்துள்ளார்.
  • குயின்ஸ்லாந்து மாநிலத்தில் booster தடுப்பூசி பெற்றிருக்காத முதியவர்களில் அதிகளவு இறப்புகள் பதிவாவதாக  மாநில தலைமை சுகாதார அதிகாரி Dr John Gerrard தெரிவித்துள்ளார்.
  • Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.
  • Victoria
  • NSW
  • Queensland
  • South Australia
  • Tasmania
  • Northern Territory
  • ACT

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மேலும் 10,698 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 31 பேர் மரணமடைந்தனர். 2,494 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 160 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 11,240 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 36 பேர் மரணமடைந்தனர். 707 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 79 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 6,857 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 13 பேர் மரணமடைந்தனர். 732 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 50 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

டஸ்மேனியாவில் புதிதாக 570 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 13 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் இருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

ACT-இல் புதிதாக 449 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 65 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

NSW பயணம் குறித்த தரவுகள்  மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

VIC பயணம் குறித்த தரவுகள்வெளி நாட்டுப் பயணம் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

ACT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

NT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

QLD பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

SA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

TAS பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

WA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது குறித்த விபரங்களுக்கு covid19.homeaffairs.gov.au/leaving-australia என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்  Smart Traveller இணையத்தளத்தில் வெளியாகும்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:

COVID-19 Vaccination Glossary
Appointment Reminder Tool.


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

NSW 

Victoria 

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania

Northern Territory 


மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

NSW 

Victoria 

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania
Northern Territory


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

3 min read

Published

Updated




Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now