தொற்றாளர் எண்ணிக்கை NSW, விக்டோரியாவில் குறைகிறது; பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது

கொரோனா வைரஸ் குறித்து அக்டோபர் மாதம் 12ஆம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

Kiongozi wa Victoria Daniel Andrews azungumza na vyombo vya habari mjini Melbourne

Kiongozi wa Victoria Daniel Andrews azungumza na vyombo vya habari mjini Melbourne. Source: AAP Image/James Ross

  • NSW மாநிலத்தில் முடக்கநிலையால் பாதிக்கப்பட்ட வணிக நிறுவனங்களுக்கு நிதி நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது
  • விக்டோரியா மாநிலத்தில் சுகாதாரத் துறைக்கு மேலதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
  • உலகிலேயே முதலாவது சிறுவர் மனநல மருத்துவ திட்டத்தை அரசு அறிவித்தது

விக்டோரியா

விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,466 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்று கண்ட 675 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் அவர்களில் 7 சதவீதமானவர்கள் மட்டுமே தடுப்பூசியை முழுமையாகப் போட்டிருக்கிறார்கள்.  தொற்றினால் மேலும் எட்டுப் பேர் உயிரிழந்துள்ளார்கள்.

முதலாவது தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் முடிந்தவரை அதிக காலம் காத்திருக்காமல் இரண்டாவது தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளுமாறு Premier Daniel Andrewsகேட்டுக் கொண்டார்.

மாநிலத்தில் முடக்கநிலை கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதற்கு முன்னதாக, மாநில சுகாதாரத் துறைக்கு பல மில்லியன் டொலர்கள் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாநில அரசு அறிவித்தது.

Covid தொற்றாளர்களைப் பராமரிக்கும் மருத்துவமனை ஊழியர்களுக்கு 225 மில்லியன் டொலர்களும்; சுகாதாரத் துறையில் பணியாற்ற என்று 1,000 பேரை வெளிநாடுகளில் இருந்து பணிக்கமர்த்த 2.5 மில்லியன் டொலர்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி எங்கே போடலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்.


நியூ சவுத் வேல்ஸ்

New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 360 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றினால் மேலும் ஐந்து பேர் இறந்துள்ளார்கள். 

மாநிலத்தில் இயங்கும் வணிக நிறுவனங்களுக்கு நிவாரணத் திட்டம் ஒன்றை Premier Dominic Perrottet அறிவித்தார்.

தகுதி பெறும் வணிக நிறுவனங்களுக்கு 2,000 டொலர் வரை தள்ளுபடி கோர முடியும்.  சில சேவைகள் மற்றும் கட்டணங்கள் (fees) என்பவற்றிற்கு இந்தத் தொகை பயன்படுத்தப்படலாம்.  விரைவில் கெட்டுப் போகக்கூடிய (perishables) பொருட்களை வியாபாரம் செய்பவர்களுக்கும் சிறப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

“வணிக நிறுவனங்களுக்கு ஆதரவு வழங்க நாங்கள் இருக்கிறோம் என்பதை தெரிவிக்க விரும்புகிறோம்,” என்று Premier Dominic Perrottet கூறினார்.

மாநிலத்தில் அறிமுகமான முடக்கநிலை கட்டுப்பாடுகள் அடுத்ததாக 80 சதவீதமானவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் போட்டதும் தளர்த்தப்படும்.  இந்த இலக்கு, எதிர்வரும் திங்கட்கிழமை எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தடுப்பூசி போட்டுக் கொள்ள இங்கே பதிவு செய்யலாம்.


Australian Capital Territory

ACTயில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 28 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  22 பேருக்குத் தொற்று எங்கிருந்து வந்தது என்பது தெரியும்.

தடுப்பூசி எங்கே போடலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்.


கடந்த 24 மணி நேரத்தில்

  • குயின்ஸ்லாந்து மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக யாருக்கும் தொற்று இருப்பது அடையாளம் காணப்படவில்லை.
  • நாட்டில் 82.8 சதவீதமானவர்கள் தடுப்பூசியின் ஒரு சுற்றையும் 63.4 சதவீதமானவர்கள் தடுப்பூசியை முழுமையாகவும் போட்டுக் கொண்டுள்ளார்கள்.
  • Booster Shot எனப்படும் மூன்றாம் சுற்று தடுப்பூசி குறித்த முடிவு (மக்கள் போட்டுக் கொள்ள வேண்டுமா? யார்? எப்போது?) இந்த மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் Greg Hunt கூறினார்.

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

NSW பயணம் குறித்த தரவுகள்  மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

VIC பயணம் குறித்த தரவுகள்வெளி நாட்டுப் பயணம் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

ACT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

NT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

QLD பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

SA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

TAS பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

WA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு covid19.homeaffairs.gov.au/leaving-australia என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்  Smart Traveller இணையத்தளத்தில் வெளியாகும்.


 

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


 

NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:

COVID-19 Vaccination Glossary
Appointment Reminder Tool.


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

NSW 

Victoria 

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania

Northern Territory 


மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

NSW 

Victoria 

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania
Northern Territory


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 


Share

4 min read

Published

Updated

By SBS/ALC Content, Kulasegaram Sanchayan

Source: SBS




Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now