கோவிட்: மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு! மேலும் 100 பேர் மரணம்!!

கொரோனா வைரஸ் குறித்து ஜுலை மாதம் 26ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

Healthcare workers administer COVID-19 tests at the St Vincent's Hospital drive-through testing clinic.

Healthcare workers administer COVID-19 tests at the St Vincent's Hospital drive-through testing clinic. (file) Source: (AAP Image/Bianca De Marchi)

விக்டோரியாவில் 40 பேர், குயின்ஸ்லாந்தில் 21 பேர் மற்றும் நியூ சவுத் வேல்ஸில் 30 பேர் என நாடு முழுவதும் கோவிட் தொடர்பிலான மேலும் 100 இறப்புகள் பதிவாகியுள்ளன. 

கோவிட் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து மருத்துவமனைகளில் கோவிட் தொற்றுடன் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திங்களன்று புதிய உச்சம் தொட்டது.

திங்களன்று 5,429-ஆக காணப்பட்ட இவ்வெண்ணிக்கை இன்று மேலும் அதிகரித்து 5,571 ஆக பதிவாகியுள்ளது.

சிகிச்சைப் பொருட்கள் நிர்வாகம் (TGA) 12-17 வயதுடைய நபர்களுக்கான புரத அடிப்படையிலான Nuvaxovid கோவிட்-19 தடுப்பூசியை தற்காலிகமாக அங்கீகரித்துள்ளது.

Nuvaxovid கொரோனா வைரஸ் ஸ்பைக் புரதத்தின் ஒரு பகுதியைக் கொண்டுள்ளது. மனித உடலில் உள்ள நோயெதிர்ப்பு மண்டல செல்கள் ஸ்பைக் புரதத்தை அடையாளம் கண்டு, அதற்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கத் தொடங்குகின்றன. தடுப்பூசியில் நேரடி வைரஸ் இல்லை மற்றும் கோவிட்-19 தொற்றை இது உருவாக்காது.

டெல்டா, ஓமிக்ரான் திரிபுகள் மற்றும் கவலைக்குரிய பிற வளர்ந்து வரும் திரிபுகளைக் கண்டறிவதில் ஆய்வக ஆன்டிஜென் சோதனைகள் மற்றும் RATகளின் செயற்றிறன் தொடர்பில் TGA மதிப்பாய்வு செய்கிறது.

2019 ஆம் ஆண்டு முதன்முதலில் கண்டறியப்பட்டதில் இருந்து வைரஸ் பலமுறை மாற்றமடைந்துள்ளதால், இந்த சோதனைகள் தவறான எதிர்மறையான முடிவைக் காட்டக்கூடும் என்பதை TGA மறுக்கவில்லை.

5-11 வயதுடைய குழந்தைகள் கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்வது குறைவாக இருப்பதாக சமீபத்திய தரவு காட்டுகிறது. ஜூலை 24 நிலவரப்படி, 53 சதவீதம் பேருக்கு ஒரு சுற்று தடுப்பூசியும், 40 சதவீதம் பேருக்கு இரு சுற்று தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் புதிதாக  14,067 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 30 பேர் மரணமடைந்தனர். 

விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 12,339  பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 40 பேர் மரணமடைந்தனர். 

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 8,612 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 21 பேர் மரணமடைந்தனர்.

மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 4,409 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  நால்வர் மரணமடைந்தனர். 

தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 3,773  பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  மூவர் மரணமடைந்தனர். 

டஸ்மேனியாவில் புதிதாக 1328 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருவர் மரணமடைந்தனர்.

ACT- இல் புதிதாக  949 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  

NT- இல் புதிதாக  530 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.

ACT   New South Wales   Northern Territory   Queensland   South Australia  Tasmania   Victoria    Western Australia

கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

ACT   New South Wales   Northern Territory   Queensland   South Australia   Tasmania  Victoria   Western Australia 

ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிய: healthdirect.gov.au/covid19

உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு இருக்கும் தெரிவுகள் என்ன என்பதை அறிந்துகொள்ள: servicesaustralia.gov.au

உங்கள் மொழியில் கோவிட்-19-ஐப் புரிந்துகொள்ள சில உதவிகள்: mhcs.health.nsw.gov.au

உங்கள் மொழியில் அனைத்து கோவிட்-19 தகவல்களைப் படிக்க: SBS Coronavirus portal

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

3 min read

Published

Updated




Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now