- NSW மாநிலத்தில் வாழ்பவர்களில் சுமார் 90 சதவீதமானவர்கள் தடுப்பூசியின் ஒரு சுற்றாவது போட்டிருக்கிறார்கள்; ஆனால் முடக்கநிலை தளர்த்தப்பட்டதும் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என Premier எச்சரிக்கிறார்
- விக்டோரிய மாநிலத்தின் Mildura பகுதியில் முடக்கநிலை அறிமுகம்
- NSW மாநிலத்தில் அடையாளம் காணப்பட்ட புதிய Delta திரிபு (variant) குறித்து ஆய்வு நடக்கிறது
விக்டோரியா
விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,965 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் ஐந்து பேர் இறந்துள்ளார்கள்.
மாநிலத்தில் தற்போது 17,000 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களுக்குத் தொற்று இருக்கிறது. இதில் 538 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் அவர்களில் 117 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்; 83 பேருக்கு சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
விக்டோரிய மாநிலத்தின் பிராந்திய இடமான Mildura பகுதியில் வாழும் மக்களுக்கு ஏழு நாள் முடக்கநிலை நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.
மாநிலத்தில் வாழ்பவர்களில் 85 சதவீதமானவர்கள் தடுப்பூசியின் ஒரு சுற்றைப் போட்டிருக்கிறார்கள்; 57 சதவீதமானவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் போட்டிருக்கிறார்கள்.
தடுப்பூசி எங்கே போடலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்.
நியூ சவுத் வேல்ஸ்
New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 580 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் 11 பேர் இறந்துள்ளார்கள். இதில் 182 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் அதில் 163 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
எதிர்வரும் திங்கட்கிழமை கட்டுப்பாடுகளில் தளர்வுகள் நடைமுறைக்கு வந்த பின்னர், தொற்றாளர் எண்ணிக்கையும் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என Premier Dominic Perrottet எச்சரித்தார்.
வெளிநாடு ஒன்றிலிருந்து NSW மாநிலம் திரும்பிய ஒருவரிடத்தில் அடையாளம் காணப்பட்ட புதிய Delta திரிபு (variant) குறித்த ஆய்வு தொடர்கிறது.
தடுப்பூசி போட்டுக் கொள்ள இங்கே பதிவு செய்யலாம்.
கடந்த 24 மணி நேரத்தில்
- குயின்ஸ்லாந்து மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக யாருக்கும் தொற்று இருப்பது அடையாளம் காணப்படவில்லை.
- ACTயில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 25 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. 12 பேருக்குத் தொற்று எங்கிருந்து வந்தது என்பது தெரியும், மீதி ஆராயப்படுகிறது.
தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:
NSW பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
VIC பயணம் குறித்த தரவுகள், வெளி நாட்டுப் பயணம் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
ACT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
NT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
QLD பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
SA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
TAS பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
WA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு covid19.homeaffairs.gov.au/leaving-australia என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள் Smart Traveller இணையத்தளத்தில் வெளியாகும்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:
COVID-19 Vaccination Glossary
Appointment Reminder Tool.
Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
