விக்டோரியாவில் 70 சதவீதமானோர் தடுப்பூசி முழுமையாகப் போட்டுவிட்டார்கள், NSW மாநிலத்தில் மேலதிக நிவாரணம்

கொரோனா வைரஸ் குறித்து அக்டோபர் மாதம் 21ஆம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

Melanie Brisbane-Schilling (left) and daughter Maddie are reunited after spending two months apart after Melanie to Melbourne from Sydney.

Melanie Brisbane-Schilling (left) and daughter Maddie are reunited after spending two months apart after Melanie to Melbourne from Sydney. Source: AAP Image/James Ross

  • மெல்பன் நகர முடக்கநிலை இன்றிரவு 11:59ற்கு நிறைவு
  • NSW மாநிலத்தில் வணிக நிறுவனங்களுக்கு மேலதிக நிதி நிவாரணம்
  • குயின்ஸ்லாந்து மாநிலத்தில், சனிக்கிழமை, ஒரே நாளில் அதிக பேருக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம்

விக்டோரியா

விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 2,332 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றினால் மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளார்கள். 

மெல்பன் நகரில் ஆறாவது தடவையாக நடைமுறைப்படுத்தப்பட்ட முடக்கநிலை கட்டுப்பாடுகள், இன்றிரவு 11:59ற்கு நிறைவுக்கு வருகின்றன.

வெளி நாடுகளிலிருந்து மாநிலம் வருவோர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப் பட்டிருக்கலாம் என்ற செய்முறை அடுத்த வாரம் பரீட்சிக்கப்படத் தொடங்குகிறது.

விக்டோரியா மாநிலத்தில் வாழும் 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களில் 70 சதவீதமானவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டு விட்டார்கள் என்று பிரதமர் Scott Morrison அறிவித்தார்.

தடுப்பூசி எங்கே போடலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்.


நியூ சவுத் வேல்ஸ்

New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 372 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்றினால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  மேலதிகமாக, வெளி நாடுகளிலிருந்து மாநிலம் திரும்பியவர்களில் இருவருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

மாநிலத்தின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்குடன் வணிக நிறுவனங்களுக்கு புதிய நிவாரண திட்டம் ஒன்றை மாநில அரசு அறிவிக்க இருக்கிறது.  சுற்றுலா மற்றும் நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்பவர்களுக்கு ஆதரவு வழங்க ஏற்கனவே 530 மில்லியன் டொலர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் வாழும் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் மாநிலத்தில் தங்கவும் சுற்றிப் பார்க்கவும் (Stay and Discover) 50 டொலர் பெறுமதியான கூப்பன் (voucher) வழங்கப்படுகிறது.

தடுப்பூசி போட்டுக் கொள்ள இங்கே பதிவு செய்யலாம்.


குயின்ஸ்லாந்து

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக ஒருவருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்று ஏற்பட்டவர் ஒரு Uber வாகன ஓட்டி என்றும் அவர் சில வாரங்களுக்கு முன் மெல்பன் சென்று திரும்பினார் என்றும் அறிவிக்கப்பட்டது.

தொற்றாளர் மிகவும் சுகவீனமுற்று இருப்பதால் அவரிடம் இருந்து தேவையான விவரங்களைப் பெற முடியாமல் இருக்கிறது என்று தலைமை சுகாதார அதிகாரி Jeanette Young கூறினார்.

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் முடக்கநிலை கட்டுப்பாடுகள் டிசம்பர் 17ஆம் தேதி தளர்த்தப்பட திட்டமிடப் பட்டிருக்கிறது.  அதற்கு முன்னர் அதிகப்படியானவர்களுக்கு தடுப்பூசி போடும் நோக்குடன், எதிர்வரும் சனிக்கிழமை, ஒரே நாளில் 100 பாடசாலைகளில் மக்களுக்குத் தடுப்பூசி வழங்க ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி போட்டுக் கொள்ள இங்கே பதிவு செய்யலாம்.


Australian Capital Territory

ACTயில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 28 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தற்போது, மொத்தமாகத் தொற்றுள்ளவர் எண்ணிக்கை 425 என உயர்ந்துள்ளது.

16 வயதிற்கும் மேற்பட்டவர்களில் 80 சதவீதமானவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் போட்டு விட்டார்கள் என்பதால் முடக்கநிலை கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வுகள் இன்றிரவு முதல் நடைமுறைக்கு வருகின்றன.

தடுப்பூசி போட்டுக் கொள்ள இங்கே பதிவு செய்யலாம்.


கடந்த 24 மணி நேரத்தில்

  • டாஸ்மேனியா மாநிலத்தில் 16 வயதிற்கும் மேற்பட்டவர்களில் 70 சதவீதமானவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் போட்டு விட்டார்கள்.

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

NSW பயணம் குறித்த தரவுகள்  மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

VIC பயணம் குறித்த தரவுகள்வெளி நாட்டுப் பயணம் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

ACT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

NT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

QLD பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

SA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

TAS பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

WA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு covid19.homeaffairs.gov.au/leaving-australia என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்  Smart Traveller இணையத்தளத்தில் வெளியாகும்.


 

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


 

NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:

COVID-19 Vaccination Glossary
Appointment Reminder Tool.


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

NSW 

Victoria 

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania

Northern Territory 


மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

NSW 

Victoria 

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania
Northern Territory


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 


Share

4 min read

Published

By Kulasegaram Sanchayan




Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now