- முன்னர் அறிவித்ததற்கு முன்னராகவே விக்டோரியா மாநிலத்தில் முடக்கநிலை நீக்கப்படும்
- NSW மாநிலத்தில், 80 சதவீதமானவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக் கொண்டுள்ளார்கள்
- நியூசிலாந்து நாட்டுடன் தடையின்றிய விமானப் பயணம் (travel bubble) மீண்டும் இந்த வாரம் ஆரம்பிக்கிறது
- Covid-19 தொற்றுக்கு சிகிச்சை வழங்கும் மருந்து அரசினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது
விக்டோரியா
விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,838 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் ஏழு பேர் உயிரிழந்துள்ளார்கள்.
தொற்று கண்டவர்களில் 777 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அதில் 151 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள், 94 பேருக்கு சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
விக்டோரியா மாநிலத்தில் தற்போது நடைமுறையிலிருக்கும் முடக்கநிலை கட்டுப்பாடுகள் எதிர்வரும் வியாழக்கிழமை, அக்டோபர் 21ஆம் தேதி முடிவுக்கு வருகின்றன. எதிர்பார்த்ததை விட முன்னராகவே இந்த அறிவிப்பை Premier Daniel Andrews வெளியிட்டார். “வீடுகளில் தங்கியிருக்க வேண்டும் என்ற கட்டாயம் இனிமேல் இல்லை” என்றும், “ஊரடங்கு விதிகள் இல்லை” என்றும் அவர் மேலும் கூறினார்.
மாநிலத்தில் வாழும் 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களில் 89 சதவீதமானவர்கள் தடுப்பூசியின் ஒரு சுற்றைப் போட்டிருக்கிறார்கள், 65.5 சதவீதமானவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் போட்டிருக்கிறார்கள்
தடுப்பூசி எங்கே போடலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்.
நியூ சவுத் வேல்ஸ்
New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 301 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் பத்துப் பேர் உயிரிழந்துள்ளார்கள்.
மாநிலத்தில் வாழும் 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களில் 80 சதவீதமானவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் போட்டிருக்கிறார்கள் என்று அறிவித்த மாநில Premier Dominic Perrottet, நாளை முதல் மேலும் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்றார்.
மனநல சேவைகளுக்கு மேலதிகமாக 130 மில்லியன் டொலர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அவர் அறிவித்தார்.
தற்கொலைகளைத் தடுக்கவும், மனநல முதலுதவி வழங்கவும் 275,000 பேருக்குப் பயிற்சி வழங்கப்படும் என்று மனநலத் துறை அமைச்சர் Bronnie Taylor கூறினார்.
தடுப்பூசி போட்டுக் கொள்ள இங்கே பதிவு செய்யலாம்.
கடந்த 24 மணி நேரத்தில்
- Covid-19 தொற்று கண்டவர்களுக்கு சிகிச்சை வழங்கும் புதிய மருந்து Ronapreve (15,000 மருந்துகள்) அரசினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
- நியூசிலாந்து நாட்டின் சில பகுதிகளுக்கும் மெல்பன் மற்றும் சிட்னி நகரங்களுக்கும் இடையில் தடையின்றிய விமானப் பயணம் (travel bubble) மீண்டும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 19ஆம் தேதி ஆரம்பமாகிறது.
- ACTயில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 33 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
- டாஸ்மேனிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம் புதிதாக யாருக்கும் தொற்று இருப்பது கண்டறியப்படவில்லை.
- முடக்கநிலை கட்டுப்பாடுகளை நீக்கி மாநில எல்லைகள் எப்போது மீண்டும் திறக்கப்படும் என்ற முடிவை, குயின்ஸ்லாந்து மாநில அரசு இன்னமும் எடுக்கவில்லை.
தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:
NSW பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
VIC பயணம் குறித்த தரவுகள், வெளி நாட்டுப் பயணம் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
ACT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
NT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
QLD பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
SA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
TAS பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
WA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்
ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு covid19.homeaffairs.gov.au/leaving-australia என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள் Smart Traveller இணையத்தளத்தில் வெளியாகும்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:
COVID-19 Vaccination Glossary
Appointment Reminder Tool.
Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
