- விக்டோரிய மாநில அரசு அன்டிஜன் சோதனைகள் செய்ய தயாராகிறது
- NSW மாநிலத்தில் வணிக நிறுவனங்களுக்குப் புதிய ஆதரவுத் திட்டம்
- கன்பராவில் வாழும் 12 வயதிற்கு மேற்பட்டவர்களில் 66 சதவீதத்தினர் தடுப்பூசியை முழுமையாகப் போட்டிருக்கிறார்கள்
- குயின்ஸ்லாந்து மாநிலத்தில் புதிதாக யாருக்கு தொற்று இருப்பது அடையாளம் காணப்படவில்லை
விக்டோரியா
விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,420 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் 11 பேர் இறந்துள்ளார்கள். மொத்தமாக இறந்தவர்கள் எண்ணிக்கை 68ஆக உயர்ந்தது.
மாநில சுகாதாரத் துறையினர் பயன்படுத்தவென 2.2 மில்லியன் அன்டிஜன் சோதனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்கிறது. தொற்று அதிகமாக ஏற்படக்கூடிய இடங்களான பாடசாலைகள், அவசர சிகிச்சை சேவைகள் போன்றவற்றிலும் இந்த அன்டிஜன் சோதனைகள் பின்னர் அறிமுகப்படுத்தப்படும்.
நேற்று மட்டும் 90,000 பேர் மாநிலத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள் என்று கூறிய மாநில சுகாதார அமைச்சர் Martin Foley, நாட்டில் வழங்கப்பட்ட மொத்த தடுப்பூசிகளில் பாதித் தொகை அது என்றார்.
தடுப்பூசி எங்கே போடலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்.
நியூ சவுத் வேல்ஸ்
New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 594 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் 10 பேர் இறந்துள்ளார்கள்.
முடக்க நிலை கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டிருக்கும் வணிக நிறுவனங்களுக்கும் தனி நபர் வணிகங்களுக்கும் வழங்கப்படும் COVID-19 Business Grant, Micro-business Grant மற்றும் JobSaver போன்ற ஆதரவுத் தொகை பெறுவதற்குத் தகுதி பெறாத வணிகங்களுக்கு நிதி ஆதரவு வழங்க ஒரு பரிசீலனைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி போட்டுக் கொள்ள இங்கே பதிவு செய்யலாம்.
Australian Capital Territory
ACTயில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 28 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தொற்றினால் மேலும் ஒருவர் இறந்துள்ளார்.
Centenary Hospital for Women and Children குழந்தைகள் மருத்துவமனையில் தொற்றுடன் அனுமதிக்கப்பட்டுள்ள ஒரு குழந்தை சிகிச்சை பெற்று வருகிறது.
ACTயில் தற்போது மொத்தமாக தொற்றுள்ளவர்கள் எண்ணிக்கை 395.
தடுப்பூசி எங்கே போடலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்.
கடந்த 24 மணி நேரத்தில்
- Ipswich, Logan, Beaudesert and the Sunshine Coast மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்ட குயின்ஸ்லாந்து Premier Annastacia Palaszczuk, பிரிஸ்பன் நகரில் வாழ்பவர்களில் சுமார் 70 சதவீதமானோர் தடுப்பூசியின் முதல் சுற்றைப் போட்டுள்ளார்கள் என்று கூறினார்.
