மேற்கு ஆஸ்திரேலிய மாநில கோவிட் கட்டுப்பாடுகளில் பாரிய தளர்வு!

கொரோனா வைரஸ் குறித்து செப்டம்பர் மாதம் 2ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்

 PUBLIC TRANSPORT

Commuters at a train station. Source: AAP / DAN HIMBRECHTS/AAPIMAGE

விக்டோரியாவில் 17 பேர் மற்றும் நியூ சவுத் வேல்ஸில் 21 பேர் என நாடுமுழுவதும் கோவிட் தொடர்பிலான மேலும் 58 இறப்புகள் பதிவாகியுள்ளன.

Rideshare மற்றும் டாக்சிகள் உட்பட பொதுப் போக்குவரத்தில் முகக்கவச விதிகளை நீக்கிய முதல் மாநிலமாக மேற்கு ஆஸ்திரேலியா ஆனது. புதிய மாற்றங்கள் செப்டம்பர் 9 முதல் நடைமுறைக்கு வரும்.

இருப்பினும் மருத்துவமனைகள், சிறைச்சாலைகள், முதியோர் பராமரிப்பு மற்றும் ஊனமுற்றோர் பராமரிப்பு மையங்கள் போன்ற, தொற்றுப்பரவக்கூடிய அதிக ஆபத்துள்ள அமைப்புகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும்.

தனியார் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கான கட்டாய கோவிட் தடுப்பூசி நிபந்தனைகளை குயின்ஸ்லாந்து கைவிட்டுள்ளது.

இருப்பினும், முதியோர் மற்றும் ஊனமுற்றோர் பராமரிப்பு மையங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் தேவையான தடுப்பூசிகளை போட்டுக்கொண்டிருக்க வேண்டியது கட்டாயமாகும்.

நோய் அறிகுறிகளற்றவர்களுக்கான கோவிட் தனிமைப்படுத்தல் காலத்தை ஏழிலிருந்து ஐந்து நாட்களாகக் குறைக்கும் தேசிய அமைச்சரவையின் முடிவைப் பிரதமர் Anthony Albanese நியாயப்படுத்தியுள்ளார்.

ஆகஸ்ட் 28 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் புதிய உலகளாவிய கோவிட்-19 தொற்றுகள் மற்றும் இறப்புகள் முறையே 16 சதவீதம் மற்றும் 13 சதவீதம் குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தனது சமீபத்திய வாராந்திர அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் புதிதாக 4,169 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 21 பேர் மரணமடைந்தனர்.

விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 2,393 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 17 பேர்மரணமடைந்தனர்.

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 1,794 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் மரணமடைந்தார்.

மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 1,200 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 13 பேர் மரணமடைந்தனர்.

தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 558 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மூவர் மரணமடைந்தனர்.

டஸ்மேனியாவில் புதிதாக 189 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ACT- இல் புதிதாக 163 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் மரணமடைந்தார்.

NT- இல் புதிதாக 98 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருவர் மரணமடைந்தனர்.

கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

ACT 

New South Wales 

Northern Territory 

Queensland

South Australia 

Tasmania 

Victoria 

Western Australia

Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும்பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.

ACT 

New South Wales 

Northern Territory 

Queensland

South Australia 

Tasmania 

Victoria 

Western Australia

ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிய:

healthdirect.gov.au/covid19

உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு இருக்கும் தெரிவுகள் என்ன என்பதைஅறிந்துகொள்ள:

servicesaustralia.gov.au

உங்கள் மொழியில் கோவிட்-19-ஐப் புரிந்துகொள்ள சில உதவிகள்:

 mhcs.health.nsw.gov.au

உங்கள் மொழியில் அனைத்து கோவிட்-19 தகவல்களைப் படிக்க:

SBS Coronavirus portal

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரைசெல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.

——————————————————————————————

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in  

பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

3 min read

Published

Source: SBS




Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now