ஆஸ்திரேலியா முழுவதும் கோவிட் தொற்று காரணமாக மேலும் 45 பேர் மரணம்!

கொரோனா வைரஸ் குறித்து ஏப்ரல் மாதம் 14ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

Omicron cases on the rise in NSW

Omicron cases on the rise in NSW Source: AAP Image/Dan Himbrechts

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

NSW, விக்டோரியா, டஸ்மேனியா, மேற்கு ஆஸ்திரேலியா, தெற்கு ஆஸ்திரேலியா,ACT மற்றும் குயின்ஸ்லாந்தில் கோவிட் தொடர்பிலான மேலும் 45 இறப்புகள் பதிவாகியுள்ளன.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மேலும் 17,856 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 21 பேர் மரணமடைந்தனர். 1,582 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 71 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 10,462 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 14 பேர் மரணமடைந்தனர். 392 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 19 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

டஸ்மேனியாவில் புதிதாக 1,843 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருவர் மரணமடைந்தனர்.  50 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

NT- இல் புதிதாக 563 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 30 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

ACT- இல் புதிதாக 1,074 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் மரணமடைந்தார். 62 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக 8,754 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 4 பேர் மரணமடைந்தனர். 590 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 16 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 8,144 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருவர் மரணமடைந்தனர். (இந்த மரணங்கள் கடந்த சில நாட்களில் பதிவானவை)  200 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். 

தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில், புதிதாக 5,398 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் மரணமடைந்தார்.  238 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களில் 11 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

மேற்கு ஆஸ்திரேலியா தனது கோவிட்-19 கட்டுப்பாடுகளை ஏப்ரல் 14 வியாழன் நள்ளிரவு 12.01 மணி முதல் தளர்த்தியுள்ளது.

அனைத்து விருந்தோம்பல் மையங்கள் மற்றும் விழா அரங்குகளுக்கான 500 capacity limit-ஐ அரசு நீக்கியுள்ளது. சர்வதேச மற்றும் உள்நாட்டு பயணிகள் மாநிலத்திற்குள் வருகைதரும்போது antigen சோதனை செய்திருக்க வேண்டிய அவசியமில்லை.

நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கான வரையறை மாற்றப்பட்டுள்ளது. முழு விவரங்களை இங்கே படிக்கவும்.

ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் Sentinel என்ற புதிய COVID-19 screening system முறையை உருவாக்கியுள்ளனர். இது தினசரி 90,000 க்கும் மேற்பட்ட மாதிரிகளை சோதித்து ஒரு மணி நேரத்திற்குள் முடிவுகளை வழங்கும்.

PCR சோதனையை விட இது வேகமானது என்றும் ஆன்டிஜென் சோதனையை விட இது துல்லியமானது என்றும் நம்பப்படுகிறது.

கோவிட்-19 இன் இரண்டாவது Omicron அலையைச் சமாளிக்க மாநிலத்தின் சுகாதார அமைப்பு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருவதாக குயின்ஸ்லாந்தின் acting premier Steven Miles தெரிவித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோவிட் தொற்றாளர்களின்  எண்ணிக்கை ஒரே மாதத்தில் இரட்டிப்பாகியுள்ளதாக தரவு காட்டுகிறது.

ஈஸ்டர் விடுமுறைக்காலத்தில் தத்தம் மாநிலங்களில் தடுப்பூசி கிளினிக்குகள் மற்றும் பரிசோதனை மையங்கள் திறந்திருக்கும் நேரங்களை தெரிந்துவைத்திருக்குமாறு குடியிருப்பாளர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கோவிட்-19 தொற்றுநோய் பொது சுகாதார அவசரநிலையாகவே உள்ளது என உலக சுகாதார அமைப்பின் director-general Tedros Adhanom Ghebreyesus தெரிவித்துள்ளார்.

இந்த வைரஸ் காலப்போக்கில் அதிகளவில் பரவக்கூடியதாக மாறியுள்ளது என்றும் பாதுகாப்பற்ற மற்றும் தடுப்பூசி போட்டிராத மக்களுக்கு இது ஆபத்தானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.

ACT   New South Wales   Northern Territory   Queensland   South Australia  Tasmania   Victoria    Western Australia

கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

ACT   New South Wales   Northern Territory   Queensland   South Australia   Tasmania  Victoria   Western Australia 

ஆஸ்திரேலியாவில் நீங்கள் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதை கண்டறிய: healthdirect.gov.au/covid19

உங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு இருக்கும் தெரிவுகள் என்ன என்பதை அறிந்துகொள்ள: servicesaustralia.gov.au

உங்கள் மொழியில் கோவிட்-19-ஐப் புரிந்துகொள்ள சில உதவிகள்: mhcs.health.nsw.gov.au

உங்கள் மொழியில் அனைத்து கோவிட்-19 தகவல்களைப் படிக்க: SBS Coronavirus portal

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

3 min read

Published

Updated




Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now