மேற்கு ஆஸ்திரேலிய எல்லையைத் திறக்கும் திட்டம் மீண்டும் பிற்போடப்பட்டது!

கொரோனா வைரஸ் குறித்து ஜனவரி மாதம் 21ம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

WA Premier Mark McGowan speaks during an announcement in Perth, Monday, December 13, 2021.

WA Premier Mark McGowan speaks during an announcement in Perth, Monday, December 13, 2021. Source: AAP

  • மேற்கு ஆஸ்திரேலிய எல்லைகளை பெப்ரவரி 5ம் திகதி மீண்டும் திறப்பதாக தெரிவித்திருந்த மாநில Premier Mark McGowan அதிலிருந்து பின்வாங்கியுள்ளார்.
  • நாடு முழுவதும் Omicron பரவல் அதிகரித்து வருவதால், தற்போது எல்லைகளைத் திறப்பது பொறுப்பற்ற செயலாக அமையும் என Premier Mark McGowan கூறியுள்ளார்.
  • இரண்டு சுற்று தடுப்பூசி, Omicron தொற்றிலிருந்து மட்டுப்படுத்தப்பட்ட பாதுகாப்பை வழங்கக்கூடும் என்ற கரிசனையைச் சுட்டிக்காட்டியுள்ள   McGowan, booster தடுப்பூசி விகிதத்தை உயர்த்த அதிக நேரம் தேவை என்று வலியுறுத்தினார்.
  • மேற்கு ஆஸ்திரேலிய Premier Mark McGowan-இன் இம்முடிவினை ஆஸ்திரேலிய மருத்துவ சங்கத்தின் தலைவர் Dr Omar Khorshid கடுமையாகச் சாடியுள்ளார்.
  • NSW மாநிலத்தில் முன்னெப்போதும் இல்லாதவகையில் ஒரே நாளில் கோவிட் தொடர்பான 46 இறப்புகள் பதிவாகின.
  • கடந்த 24 மணிநேரத்தில் NSW மற்றும் விக்டோரிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
  • விக்டோரிய மாநிலத்தில் 1,096 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். 
  • NSW மாநிலத்தில் 2,743 கோவிட் தொற்றாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். 
  • குயின்ஸ்லாந்து மாநிலத்திலுள்ளவர்கள் தமக்கான கோவிட் தடுப்பூசியைப்பெற்று மூன்று மாதங்கள் கழிந்துவிட்டதென்றால், திங்கட்கிழமை முதல் booster தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியுமென Premier Annastacia Palaszczuk தெரிவித்துள்ளார்.
  • Antigen சோதனை உபகரணங்களின் விலை உயர்வு குறித்து ஆஸ்திரேலிய ஃபெடரல் காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.
  • Rapid antigen சோதனை (RAT) முடிவுகளை பதிவு செய்வதற்கான வசதியை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் ஏற்படுத்தியுள்ளன.
  • Victoria
  • NSW
  • Queensland
  • South Australia
  • Tasmania
  • Northern Territory

COVID-19 தொடர்பான புள்ளிவிவரங்கள்

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சமூகப்பரவல் ஊடாக மேலும்  25,168 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 46 பேர் மரணமடைந்தனர். 

விக்டோரியா மாநிலத்தில் புதிதாக 18,167 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 20 பேர்  மரணமடைந்தனர். 

டாஸ்மேனிய மாநிலத்தில் புதிதாக 866 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் மரணமடைந்தார்.

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், புதிதாக  16,031 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  13 பேர் மரணமடைந்தனர். 

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

NSW பயணம் குறித்த தரவுகள்  மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

VIC பயணம் குறித்த தரவுகள்வெளி நாட்டுப் பயணம் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

ACT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

NT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

QLD பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

SA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

TAS பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

WA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது குறித்த விபரங்களுக்கு covid19.homeaffairs.gov.au/leaving-australia என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்  Smart Traveller இணையத்தளத்தில் வெளியாகும்.


கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள்.  கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:

COVID-19 Vaccination Glossary
Appointment Reminder Tool.


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

NSW 

Victoria 

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania

Northern Territory 


மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

NSW 

Victoria 

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania
Northern Territory


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

3 min read

Published




Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now