"நாட்டைப் பெருந்தொற்றிலிருந்து மீட்டெடுப்பதை நாம் முன்னெடுத்து செல்கிறோம்" – NSW premier

கொரோனா வைரஸ் குறித்து அக்டோபர் மாதம் 11ஆம் தேதி புதுப்பிக்கப்பட்ட செய்திகள்.

NSW Premier Dominic Perrottet (right) and NSW Deputy Premier Paul Toole (2nd from right) and Treasurer Matt Kean toast with a beer at Watson’s Pub in Sydney

NSW Premier Dominic Perrottet (right) and NSW Deputy Premier Paul Toole and Treasurer Matt Kean toast with a beer at Watson’s Pub in Sydney. Source: AAP Image/DEANLEWINS

  • NSW premierஇன் எச்சரிக்கையுடன் மாநிலத்தில் முடக்கநிலை கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன
  • விக்டோரியா மாநிலத்தில் தடுப்பூசி குறித்த புதிய விழிப்புணர்வுப் பிரச்சாரம்
  • பிரதமர் தனிமைப்படுத்தலை முடித்துக் கொண்டார்

நியூ சவுத் வேல்ஸ்

New South Wales மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 496 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  அதில் இரண்டு பேர் தனிமைப்படுத்தலில் இருந்தார்கள்.  தொற்றினால் மேலும் எட்டுப் பேர் இறந்துள்ளார்கள். 

நூறு நாட்களுக்கு மேல் முடக்கநிலையிலிருந்த மாநிலத்தில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, உடற்பயிற்சிக்கூடங்கள், கஃபேக்கள், உணவகங்கள், முடிதிருத்துவோர் மற்றும் கடைகள் என்பவற்றிற்கு வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

வாடிக்கையாளர் ஒருவர் தடுப்பூசி போட்டதற்கான அத்தாட்சியைக் காண்பிக்கும் போது, அது உண்மையானது என்பதை முடிந்த வரையில் உறுதி செய்து கொள்ளுமாறு Premier Dominic Perrottet  கேட்டுக் கொண்டார்.

மாநிலத்தில் முடக்கநிலை கட்டுப்பாடுகளால் பொருளாதாரம் ஒரு வாரத்தில் 1 பில்லியன் டொலர்கள் என்ற கணக்கில் சரிந்துள்ளது என்றும், தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்றும் Premier சுட்டிக்காட்டினார்.

விரைவில் சர்வதேச எல்லைகளை மீண்டும் திறப்பதற்கு அரசுடன் இணைந்து செயல்படுவதாக Premier மேலும் கூறினார்.

“உலகின் மறுகோடியில் நாம் ஒளிந்து வாழ முடியாது, மக்கள் நாடு திரும்புவதை நாம் விரும்புகிறோம்” என்று அவர் குறிப்பிட்டார்.

தடுப்பூசி போட்டுக் கொள்ள இங்கே பதிவு செய்யலாம்.


விக்டோரியா

விக்டோரிய மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 1,612 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  தொற்று கண்ட 677 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் அவர்களில் 133 பேருக்குத் தீவிர சிகிச்சை வழங்கப்படுகிறது, 94 பேருக்கு சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

மாநிலத்தில் 81,000 பேர் நேற்று, ஞாயிற்றுக்கிழமை, தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள்.

குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள இளையோர் ஊக்குவிக்க வேண்டுமென்று அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.

Moderna மற்றும் Pfizer போன்ற mRNA தடுப்பூசிகள் மாநிலத்தில் வயது வேறுபாடின்றி அனைவருக்கும் தற்போது கிடைக்கிறது.  அனைவரும் தடுப்பூசி போட்டால் முடக்கநிலை கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்ற பொருளில் ‘Vaccine is the ticket’ என்ற தலைப்பில் விக்டோரியா மாநிலத்தில் தடுப்பூசி குறித்த புதிய விழிப்புணர்வுப் பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி எங்கே போடலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்.


Australian Capital Territory

ACTயில் சமூகப் பரவல் மூலம், புதிதாக 32 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.  12 வயதிற்கும் மேற்பட்டவர்களில் 97.8 சதவீதத்தினர் தடுப்பூசியின் ஒரு சுற்றையாவது போட்டிருக்கிறார்கள்.

தடுப்பூசி எங்கே போடலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்.


கடந்த 24 மணி நேரத்தில்

  • குயின்ஸ்லாந்து மாநிலத்தில் சமூகப் பரவல் மூலம், புதிதாக யாருக்கும் தொற்று இருப்பது அடையாளம் காணப்படவில்லை.

தனிமைப்படுத்தல், பயணம், Covid சோதனை, மற்றும் தொற்றுநோய் இடர் கால மானியம்

தனிமைப்படுத்தல் மற்றும் Covid சோதனைகள் மாநில மற்றும் பிரதேச அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன:

NSW பயணம் குறித்த தரவுகள்  மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

VIC பயணம் குறித்த தரவுகள்வெளி நாட்டுப் பயணம் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

ACT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

NT பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

QLD பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

SA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

TAS பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

WA பயணம் குறித்த தரவுகள் மற்றும் தனிமைப்படுத்தல் விபரங்கள்

ஆஸ்திரேலியர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள அதேநேரம் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் விதிவிலக்கு அனுமதி பெறவேண்டும். இது குறித்த மேலதிக விபரங்களுக்கு covid19.homeaffairs.gov.au/leaving-australia என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும். சர்வதேச விமானப் போக்குவரத்து குறித்த பிந்திய தகவல்கள்  Smart Traveller இணையத்தளத்தில் வெளியாகும்.


 

கொரோனா குறித்த தகவல்கள்

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


 

NSW Multicultural Health Communication Service-இன் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை பின்வரும் இணைப்புக்களில் பெற்றுக் கொள்ளலாம்:

COVID-19 Vaccination Glossary
Appointment Reminder Tool.


Covid சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:

NSW 

Victoria 

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania

Northern Territory 


மாநில மற்றும் பிரதேச அரசு மற்றும் ஆதரவு நிறுவனங்கள் வழங்கும் இடர் கால மானியம் குறித்த தகவல்:

NSW 

Victoria 

Queensland 

South Australia 

ACT 

Western Australia 

Tasmania
Northern Territory


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 


Share

4 min read

Published

Updated

By SBS/ALC Content, Kulasegaram Sanchayan

Source: SBS




Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now