இந்த ஒன்பது கோடீஸ்வரர்களினதும் நிகர மதிப்பு இன்றைய கணக்கிற்கு 24.94 பில்லியன் ஆஸ்திரேலிய டொலர்கள் என்று கணிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வருடங்களில் பெரு நட்டத்தில் திண்டாடிக்கொண்டிருந்த இவர்களது தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களின் லாபம் இந்த வருட ஆரம்பத்திலிருந்து பல நூற்றுக்கணக்கான வீதங்களில் அதிகரித்துள்ளது.
Highlight
- கோவிட் தடுப்பூசிகளை உற்பத்தி செய்து விநியோகிக்கும் நிறுவனங்களை சேர்ந்த ஒன்பது பேர் திடீர் கோடீஸ்வரர் ஆகியிருக்கிறார்கள்.
- முதல் இரண்டு இடங்களிலும் உள்ளவர்கள் Moderna நிறுவன உரிமையாளர் மற்றும் BioNTech நிறுவன உரிமையாளர் ஆவர்.
- இவர்கள் இருவரினதும் நிகர மதிப்பு தற்போது 5.17 பில்லியன் ஆஸ்திரேலிய டொலர்கள்.
இந்தக்கோடீஸ்வரர்களின் பட்டியலில் முதல் இரண்டு இடங்களிலும் உள்ளவர்கள் Moderna நிறுவன உரிமையாளர் Stéphane Bancel மற்றும் Pfizer தடுப்பூசி தயாரிக்கும் BioNTech நிறுவன உரிமையாளர் Ugur Sahin ஆகியோர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரினதும் நிகர மதிப்பு தற்போது 5.17 பில்லியன் ஆஸ்திரேலிய டொலர்கள் என்று கணிப்பிடப்பட்டுள்ளது.
கோவிட் தடுப்பூசியை தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்றான Moderna-வின் பங்கு விலை கடந்த 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்திலிருந்து சுமார் 700 வீதத்தினால் அதிகரித்துள்ளது.
அதுபோல, Pfizer தடுப்பூசியை தயாரிக்கும் நிறுவனத்தின் பங்கு விலை 600 வீதத்தினால் அதிகரித்துள்ளது.
Pfizer தடுப்பூசியை உற்பத்தி செய்யும் BioNTech நிறுவனம் இந்த வருடம் தான் அடையப்போகும் தடுப்பூசி விற்பனையின் மொத்த பெறுமதி 33.6 பில்லியன் ஆஸ்திரேலிய டொலர்கள் என்று தெரிவித்துள்ளது.
இந்த வருட முதல் மூன்று மாதங்களில் மாத்திரம் BioNTech நிறுவனத்தின் தேறிய லாபம் 1.73 பில்லியன் ஆஸ்திரேலிய டொலர்கள் என்று தெரிவித்துள்ளது.
அதேபோல, Moderna தடுப்பூசியை தயாரிக்கும் நிறுவனம் இந்த வருட முதல் மூன்று மாதங்களில் 2.2 பில்லியன் ஆஸ்திரேலிய டொலர்களுக்கு தடுப்பூசி விற்பனையை மேற்கொண்டிருக்கிறது.
இந்த வருடத்தில் Moderna நிறுவனத்திற்கு தடுப்பூசி விற்பனையால் 17.06 பில்லியன் ஆஸ்திரேலிய டொலர்கள் வருமானம் கிடைக்கும் என்று அந்த நிறுவனம் உறுதியாக தெரிவித்துள்ளது.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனாவைரஸ்உதவிமையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.