Latest

சுற்றுலாத்துறை சார்ந்த வேலைகள் தொற்றுநோய்க்கு முந்தைய நிலைக்குத் திரும்புகின்றன

கொரோனா வைரஸ் குறித்த இவ்வார செய்திகளின் தொகுப்பு

2019 SYDNEY NYE FIREWORKS

German tourists pose for photographs at the Sydney Harbour Bridge. (file) Source: AAP / CITY OF SYDNEY - LUKAS COCH/AAPIMAGE

Highlights:
  • நியூ சவுத் வேல்ஸில் புதிய வாராந்திர கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
  • தொற்றுநோயின் ஆரம்ப கட்டங்களில் ஆஸ்திரேலியாவின் நிகோடின் நுகர்வு 30 சதவீதம் அதிகரித்ததாக ஆய்வு கூறுகிறது
  • NSW மாநிலத்தில் 2021 இல் Delta அலையின் போது விதிக்கப்பட்ட அபராதங்கள் நல்லதை விட அதிக தீங்கு செய்தன: UNSW ஆராய்ச்சியாளர்கள்
ஆஸ்திரேலிய புள்ளியியல் பணியகத்தின் சமீபத்திய தரவுகள், சுற்றுலாத்துறை சார்ந்த வேலைகள் கிட்டத்தட்ட தொற்றுநோய்க்கு முந்தைய நிலைக்குத் திரும்பியுள்ளன என்பதைக் காட்டுகிறது.

"பெண்களை விட ஆண்களுக்கான வேலைகள் 2019 இல் இருந்த அளவின் 92.7 சதவீதத்திற்கு மீண்டுள்ளது. பெண்களின் வேலைகள் 86.7 சதவீதமாக உள்ளது" என்று இத்தரவு கூறுகிறது.

விடுமுறையில்வந்து வேலைசெய்பவர்களுடன் தொடர்புடைய வேலைகள், மிகவும் குறிப்பிடத்தக்க மீட்சியைக் காட்டியுள்ளதாக ஆஸ்திரேலிய புள்ளியியல் பணியகத்தின் tourism statistics தலைவர் Jonathon Khoo கூறினார்.

இருப்பினும், கல்வி மற்றும் பயிற்சித் துறையில் தொற்றுநோய்களின் போது இழக்கப்பட்ட வேலைகள் மிகவும் மெதுவாக மீண்டுவருவதாக அவர் கூறினார்.
NSW மாநிலத்தில், வாராந்திர கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுகிறது. கடந்த வாரம் பதிவான 7,871 தொற்றுகளுடன் ஒப்பிடும்போது இவ்வாரம் 8,905 தொற்றுகள் பதிவாகியுள்ளன.

விக்டோரியாவிலும் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் சிறிது அதிகரிப்பு காணப்படுகிறது. இந்த வாரம் 3,960 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. முந்தைய வாரத்தில் இது 3,319 ஆக இருந்தது.

தொற்றுநோய் பரவல் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட கடுமையான விதிகளின் காரணமாக, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர் ஆதரவாளர் அல்லது பராமரிப்பாளர்கள் போன்றோர் தமது மருத்துவசந்திப்புகள் மற்றும் சிகிச்சைகளில் கலந்துகொள்ள முடியாமல் இருந்ததையிட்டு, கணிசமான மன அழுத்தத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள் என்று, சிட்னி பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவில் உள்ள Duke பல்கலைக்கழகம் ஆகியவற்றின் புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
கோவிட் தொற்றுநோயின் ஆரம்ப கட்டங்களில், ஆஸ்திரேலியாவில் நிகோடின் நுகர்வு 30 சதவீதம் அதிகரித்ததாக குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் புகையிலை மற்றும் நிகோடின் நுகர்வு குறைந்து வருகிறது, ஆனால் கோவிட்-19 தொற்றுநோய் தற்காலிகமாக இந்த போக்கை சீர்குலைத்திருக்கலாம் என்று இணை பேராசிரியர் Phong Thai கூறினார்.

2021 ஆம் ஆண்டில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஏற்பட்ட Delta அலையின் போது விதிக்கப்பட்ட அபராதம் "நல்லதை விட அதிக தீங்கு விளைவித்தது" என்று UNSW ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

இந்த அபராதங்களை வழங்குவதில் இருந்து வெளிப்பட்ட இரண்டு முக்கிய விளைவுகளில் முதன்மையானது - மக்களைத் தொடர்ந்து கொண்டிருக்கும் கடன் என்றும், இரண்டாவது விளைவு பொலிஸ்-பொதுமக்கள் உறவுகளை சேதப்படுத்தியமை எனவும், முன்னணி ஆராய்ச்சியாளர் பேராசிரியர் Luke McNamara கூறினார்.
உலக சுகாதார அமைப்பின் Technical COVID-19 தலைவர் Dr Maria Van Kerkhove, கோவிட்-19 வைரஸின் தோற்றத்தைப் புரிந்துகொள்வது அவசியம் என்றார்.

"இந்த தொற்றுநோய் எவ்வாறு தொடங்கியது என்பதைப் புரிந்துகொள்வது நாம் இருக்கும் தற்போதைய சூழ்நிலைக்கு மட்டுமல்ல, சிறப்பாக தயாராகவும் எதிர்கால தொற்றுநோய்கள் மற்றும் தொற்றுநோய்களைத் தடுப்பதற்கும் முற்றிலும் முக்கியமானது" என்று Dr Maria Van Kerkhove கூறினார்.

"தற்போது, இந்த தொற்றுநோய் எவ்வாறு தொடங்கியது என்பதை முடிவு செய்வதற்கான தரவு எங்களிடம் இல்லை." எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கு முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது, கடந்த 28 நாட்களில் உலகளாவிய கோவிட் தொற்றுகள் 40 சதவீதம் குறைந்துள்ளதாகவும், இறப்புகளில் 57 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் தனது சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது, அமெரிக்கா, ஜப்பான், சீனா, ஜெர்மனி மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் அதிக அளவில் கோவிட் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

Long COVID clinic அமைந்துள்ள இடங்கள் குறித்த தரவுகளை இங்கே காணலாம்:
கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
Rapid antigen சோதனை (RAT) நேர்மறை முடிவுகளை இங்கே பதிவுசெய்யுங்கள்
உங்கள் மொழியில் அனைத்து கோவிட்-19 தகவல்களைப் படிக்க: SBS Coronavirus portal

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in  
பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் 
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share

Published

Updated

Source: SBS

Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand