கிறிஸ்மஸ் & புத்தாண்டு கொண்டாட்ட காலத்தில் கோவிட்டிலிருந்து நம்மைப் பாதுகாப்பது எப்படி?

கடுமையான நோய் அபாயத்தில் உள்ளவர்கள், COVID-safe திட்டத்தை வைத்திருப்பது குறித்து தங்கள் மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்கும்படி நியூ சவுத் வேல்ஸ் தலைமை சுகாதார அதிகாரி Dr Kerry Chant, வலியறுத்தினார்.

Christmas celebrations in Australia.

Christmas celebrations in Australia. Source: Supplied / Supplied by: Bennet Christian

Key Points
  • சமூக நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கு முன், RAT சோதனையை மேற்கொள்ளுமாறு நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்
  • வெளியரங்குகளில் நிகழ்வுகளை நடத்தும்படி குடியிருப்பாளர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்
  • 'வயதான ஆஸ்திரேலியர்கள் மற்றும் ஊனமுற்றோர் இன்னும் கோவிட்-19 நோயால் கடுமையான நோய்க்கு ஆளாகும் அபாயத்தில் உள்ளனர்'
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, தனது தாயார் ஜப்பானில் இருந்து சிட்னி வந்து, தனது மூன்று பேரக்குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக Akiko Pollock காத்திருக்கிறார்.

திருமதி Pollockகின் தாய் முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளார், ஆனால் அவரது வயது மற்றும் நாள்பட்ட நோய் காரணமாக குடும்பத்தினர் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

"நாங்கள் அதைப் பற்றி அதிகம் கவலைப்பட விரும்பவில்லை, ஆனால் நாங்கள் எங்கள் கைகளை நன்கு கழுவி, சுத்தப்படுத்தப்படுவதை உறுதி செய்வோம், மேலும் ஒருவருக்கொருவர் ஆரோக்கியத்தைக் கவனிப்போம்" என்று திருமதி Pollock SBS இடம் தெரிவித்தார்.

ஆனால் ஆஸ்திரேலியாவில் தற்போது நிலவும் கோவிட்-19 அலை காரணமாக நெரிசலான இடங்கள் மற்றும் கூட்டங்களைத் தவிர்க்க Pollock குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.
Akiko Pollock 2.jpeg
The Pollock family. Credit: Akiko Pollock
நியூ சவுத் வேல்ஸ் தலைமை சுகாதார அதிகாரி Dr Kerry Chant கூறுகையில், பாதிக்கப்படக்கூடிய மற்றும் கடுமையான நோய்க்கான அதிக ஆபத்தில் உள்ள முதியவர்கள், COVID-safe திட்டத்தை வைத்திருப்பது குறித்து தங்கள் பொது மருத்துவர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்கிறார்.

"உங்கள் PCR சோதனையை எளிதாக்க அவர்கள் உங்களுக்கு pathology படிவத்தை வழங்கலாம், மேலும் நீங்கள் கோவிட் வைரஸ் தடுப்பு மருந்துகளுக்கு தகுதியுடையவரா என்பதை உங்களுக்குத் தெரிவிக்கலாம்" என்று Dr Kerry Chant கூறினார்.

"கடுமையான நோய்களுக்கு எதிரான சிறந்த பாதுகாப்பாக இருக்கும் என்பதால், தேவையான கோவிட் தடுப்பூசிகளை போட்டிருக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்" என்று அவர் மேலும் கூறினார்.

இதேவேளை கோவிட் நோயால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய மக்கள், தங்களுக்கிருக்கும் தொற்று அபாயத்தையும் சமூக நிகழ்வுகளில் கலந்துகொள்வதால் அவர்களுக்கு ஏற்படும் நன்மைகளையும் மதிப்பிடுவதற்கான தெரிவு வழங்கப்பட வேண்டும் என Deakin பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் (தொற்றுநோயியல்) Hassan Vally சொல்கிறார்
Hassan Vally Photo 2.jpg
Deakin University's associate professor in epidemiology, Hassan Vally Credit: Hassan Vally
வயதான ஆஸ்திரேலியர்கள் மற்றும் ஊனமுற்றவர்கள், கோவிட் -19 காரணமாக கடுமையான நோய்க்கு ஆளாகும் அபாயத்தில் இன்னும் உள்ளனர் என, ஆஸ்திரேலியாவின் Chief Nursing and Midwifery Officer பேராசிரியர் Alison McMillan தெரிவித்தார்.

"ஊனமுற்றோர் பராமரிப்பு மையம் அல்லது முதியோர் பராமரிப்பு மையத்தில் உள்ள அன்பானவரை நீங்கள் சந்திக்கப்போகிறீர்கள் என்றால், முன்கூட்டியே திட்டமிடுங்கள் மற்றும் உங்களது வருகை தொடர்பான நிபந்தனைகளை சரிபார்க்கவும்" என்று பேராசிரியர் McMillan கூறுகிறார்.

கைகளை நன்கு கழுவுதல் அல்லது சுத்தப்படுத்துதல் மற்றும் சரியானமுறையில் இருமலை மூடிக்கொள்ளுதல் போன்ற ஆரோக்கியமான சுகாதார நடத்தைகளைத் தொடருமாறு மக்களை அவர் வலியுறுத்தினார்.

நிகழ்வுகளில் கலந்து கொள்ளும்போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள்

நோய் அறிகுறி உள்ளவர்கள் கிறிஸ்மஸ் அல்லது புத்தாண்டு விருந்தில் கலந்து கொள்வதற்கு முன் கோவிட்-19 பரிசோதனை செய்ய வேண்டும் என்று விக்டோரியா அரசு கூறியுள்ளது.

தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டால் குறைந்தது ஐந்து நாட்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகுமாறு மக்கள் கோரப்பட்டுள்ளனர்.
பெரிய சமூக நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கு முன் RAT சோதனையை மேற்கொள்வதானது எளிதில் பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாக்க உதவும் என்று Dr Vally கூறினார்.

"எவ்வாறாயினும், உங்களுக்கு ஏதேனும் நோய் அறிகுறிகள் இருந்தால் அல்லது சமீபத்திய கோவிட் நோய்த்தொற்றில் இருந்து மீண்டு வருகிறீர்கள் என்றால், அல்லது உங்களுக்கு கோவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டால், இத்தகைய நிகழ்வுகளில் கலந்துகொள்வதைத் தவிர்க்கவேண்டும்."

நிகழ்வு நடத்தும்போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள்

மக்கள் வெளியரங்குகளில் விருந்துகளை நடத்த வேண்டும் மற்றும் கோவிட் பரவுவதைக் குறைக்க சாத்தியமான ஒவ்வொரு நடவடிக்கையையும் எடுக்க வேண்டும் என்று Dr Vally வலியுறுத்தினார்.

"காற்று சுழற்சியை மேம்படுத்தும் எதுவும் சுவாச நோய்த்தொற்றுகள் பரவுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது" என்று அவர் கூறினார்.
நிகழ்வுகளை நடத்துபவர்கள் fans மற்றும் air conditionerகளைப் பயன்படுத்தி அல்லது கதவுகள் மற்றும் ஜன்னல்களைத் திறப்பதன் மூலம் காற்றோட்டத்தை அதிகப்படுத்தலாம்.

"விருந்தினர்களின் எண்ணிக்கையை வரம்பிடவும், கலந்துகொள்வதற்கு முன் ஆன்டிஜென் சோதனையை (RAT) செய்ய ஊக்குவிக்கவும் அல்லது சில சூழ்நிலைகளில் முகக்கவசத்தை அணியவும்" என்று Dr Vally கூறினார்.

"மேலும், விருந்தினர்களுக்காக ஏராளமான அறைகள் இருப்பதையும், மேற்பரப்புகள் அடிக்கடி சுத்தம் செய்யப்பட்டு கிருமி நீக்கம் செய்யப்படுவதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்."

Long COVID clinic அமைந்துள்ள இடங்கள் குறித்த தரவுகளை இங்கே காணலாம்:
கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
Rapid antigen சோதனை (RAT) நேர்மறை முடிவுகளை இங்கே பதிவுசெய்யுங்கள்
உங்கள் மொழியில் அனைத்து கோவிட்-19 தகவல்களைப் படிக்க: SBS Coronavirus portal

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in   பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share

Published

Updated

By Yumi Oba
Source: SBS

Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand
கிறிஸ்மஸ் & புத்தாண்டு கொண்டாட்ட காலத்தில் கோவிட்டிலிருந்து நம்மைப் பாதுகாப்பது எப்படி? | SBS Tamil