SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவில் கோவிட் தடுப்பூசி எவ்வாறு, எங்கே வழங்கப்படவுள்ளது?

A doctor fills an injection syringe with COVID-19 vaccine
A doctor fills an injection syringe with COVID-19 vaccine. Source: Getty

2 min read

Published

Updated


Skip to article content

ஆஸ்திரேலியாவில் நாளொன்றுக்கு இரண்டு லட்சம் பேர் என்ற அடிப்படையில் நாடுமுழுவதிலுமுள்ள சகல மக்களுக்கும் கோவிட் தடுப்பூசியை வழங்குவதன் மூலம் எதிர்வரும் அக்டோபர் மாதத்திற்கு முன்னர் அனைவரும் கோவிட் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளும்வகையிலான மருத்துவ ஏற்பாட்டுக்கு அரசு தயாராவதாக தெரியவருகிறது.

எந்த வகையிலான கோவிட் தடுப்பூசியினை நாட்டு மக்களுக்கு வழங்குவது என்பது தொடர்பில் தீர்மானித்துள்ள அரசாங்கம், இதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பிலான ஏற்பாடுகளை தற்போது ஆராய்ந்துவருகிறது.

இந்தத் தடுப்பூசிகளை ஒவ்வொருவரும் எவ்வாறு பெற்றுக்கொள்வர், அதனைத் தொடர்ந்து நடைபெறப்போகும் மருத்துவ படிமுறைகள் என்ன என்பது குறித்து நியூ சவுத்வேல்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழுமம் சமர்ப்பித்திருக்கும் திட்ட முன்வரைவில் தெரியவருவதாவது -

- கோவிட் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளவிருப்பவர்களுக்கான அறிவித்தல் ஒவ்வொருவருக்கும் அவர்களது குடும்ப மருத்துவர்களின் (GP) ஊடாக தெரியப்படுத்தப்படும்.

- இவ்வாறு தங்களின் பெயர்கள் தடுப்பூசி வழங்குவதற்கு தெரிவுசெய்யப்பட்டிருக்கும் அறிவித்தல் கிடைக்கப்பெற்றவர்கள், தங்கள் குடும்ப மருத்துவர்களிடம் வாகன ஓட்டுநர் அனுமதிப் பத்திரத்துடன் சென்று தங்களை அடையாளம் காண்பித்து தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளலாம்.

- தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கான உறுதிச் சான்றிதழ், சுகாதாரத்துறையினரால் மின்னஞ்சல் வழி அனுப்பிவைக்கப்படும்.

- தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களின் விவரம் ஆஸ்திரேலிய தேசிய தடுப்பூசி பெற்றவர்கள் பதிவேட்டில் (Australian Immunisation Register) சேகரித்துவைக்கப்படும்.

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline- 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல்தொண்டை நோவுஇருமல்உடற்சோர்வுசுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now