Key Points
- அனைத்து விக்டோரியர்களும் டிசம்பர் 31 வரை இலவச RATகளை பெறலாம்
- WHO தலைவர் சீனாவில் அதிகரித்துள்ள கோவிட் அலை குறித்து கவலை தெரிவித்துள்ளார்
- தெற்கு ஆஸ்திரேலியாவில் இன்று முதல் இலவச முகக்கவசங்கள் விநியோகிக்கப்படுகிறது
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கோவிட் நான்காவது அலை உச்சத்தை எட்டியுள்ளதாக மாநில தலைமை மருத்துவ அதிகாரி Dr Kerry Chant கூறினார். ஆனால் சமூகத்தில் பரவல் இன்னமும் அதிகமாக உள்ளது என்று அவர் எச்சரித்தார்.
"மருத்துவமனைகள் மற்றும் முதியோர் பராமரிப்பு மையங்களில் முகக்கவசங்களை அணியுமாறு மக்களைக் கேட்டுக்கொள்கிறோம்" என Dr Kerry Chant கூறினார்.
"முகக்கவசங்கள் நோய்ப்பரவல் ஆபத்தைக் குறைப்பதால் நெரிசலான உட்புற இடங்களில் இவை பரிந்துரைக்கப்படுகின்றன. உங்களைச் சுற்றி இருப்பவர்களில் யார் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்று உங்களுக்குத் தெரியாது." என அவர் சுட்டிக்காட்டினார்.
சுய-அறிக்கை செய்யப்பட்ட RAT நேர்மறை முடிவுகள், PCR சோதனை நேர்மறை முடிவுகள், ஆம்புலன்ஸ் அழைப்புகள் மற்றும் முதியோர் பராமரிப்பு மையங்களில் வசிப்பவர்களிடையே இனங்காணப்பட்ட தொற்றுகள் என்பவற்றில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக குயின்ஸ்லாந்தின் தலைமை சுகாதார அதிகாரி Dr John Gerrard தெரிவித்தார்.
NSW இல் இவ்வாரம் 38,610 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. இது முந்தைய வாரத்தில் 40,695 ஆக இருந்தது.
விக்டோரியாவில் கடந்த வாரம் 24,652 தொற்றுகள் இனங்காணப்பட்ட அதேநேரம் இவ்வாரம் 24,238 தொற்றுகள் பதிவாகியுள்ளன.
அனைத்து விக்டோரியர்களும் டிசம்பர் 31 வரை மாநிலத்தின் எந்த சோதனை மையத்திலும் இரண்டு இலவச RAT பாக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம்.
விக்டோரிய அரசு நடத்தும் அனைத்து PCR பரிசோதனை கிளினிக்குகள் மற்றும் மொபைல் தடுப்பூசி சேவைகள் டிசம்பர் 31 முதல் மூடப்படும்.
தெற்கு ஆஸ்திரேலியாவில் டிசம்பர் 23 முதல் metropolitan SA Pathology சோதனை மையங்களில் இலவச முகக்கவசங்கள் விநியோகிக்கப்படும்.
தெற்கு ஆஸ்திரேலியாவின் பொது மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்பவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும்.
மாநிலத்தின் Pathology PCR சோதனை மையங்கள் விடுமுறை நாட்களில் திறந்திருக்கும். ஆனால் தேவைக்கு ஏற்ப வழக்கமான நேரம் மாறலாம்.
உலக சுகாதார அமைப்பின் director-general Tedros Ghebreyesus சீனாவில் கோவிட்-19 பரவல் குறித்து கவலை தெரிவித்தார்.
"நாங்கள் கோரிய தரவுகளைப் பகிர்ந்து கொள்ளவும், ஆய்வுகளை நடத்தவும் சீனாவை நாங்கள் தொடர்ந்து அழைக்கிறோம்," என்று அவர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
இந்த ஆண்டு கோவிட் தொற்றுநோய் கணிசமாகக் குறைந்துள்ளதாகவும், உலகளாவிய monkeypox பரவல் குறைந்து வருவதாகவும் Dr Ghebreyesus கூறினார்.
ஜப்பான், கொரியா, அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் அதிக எண்ணிக்கையிலான புதிய கோவிட்-19 தொற்றுகள் பதிவாகியுள்ளன.
விடுமுறை நாட்களிலும் பின்வரும் சேவைகள் கிடைக்கும்:
- Lifeline – 13 11 14. For people who are deaf or hard of hearing, text Lifeline on 0477 131 144
- MindMap youth portal – 1800 862 111
- Access Mental Health Team – 1800 629 354 or 02 6205 1065
- Suicide Call Back Service – 1300 659 467
Long COVID clinic அமைந்துள்ள இடங்கள் குறித்த தரவுகளை இங்கே காணலாம்:
கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
Rapid antigen சோதனை (RAT) நேர்மறை முடிவுகளை இங்கே பதிவுசெய்யுங்கள்
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.