Latest

BA.4/BA.5 திரிபுகளுக்கெதிராக பாதுகாப்பு வழங்கும் புதிய தடுப்பூசிக்கு TGA அனுமதி

கொரோனா வைரஸ் குறித்த இவ்வார செய்திகளின் தொகுப்பு

AUSTRALIAN ISLAMIC CENTRE POP UP VAX CENTRE

A Melbourne resident receives his COVID-19 vaccine at a clinic in Newport. Source: AAP / JAMES ROSS/AAPIMAGE

Key Points
  • நேர்மறையான RAT முடிவுகளைப் பதிவுசெய்யவேண்டுமென்ற நடைமுறையை ACT பிராந்தியம் பிப்ரவரி 28 அன்று நீக்குகிறது
  • உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணங்கள் இன்னும் தொற்றுநோய்க்கு முந்தைய நிலைக்கு திரும்பவில்லை என்பதை சிட்னி விமான நிலைய தரவுகள் காட்டுகின்றன
  • கடந்த 28 நாட்களில் உலகளாவிய கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 89 சதவீதம் குறைந்துள்ளதாக WHO தெரிவித்துள்ளது
ஓமிக்ரான் திரிபு மற்றும் அதன் துணைத்திரிபுகளான BA.4/BA.5 வகைகளை இலக்காகக் கொண்ட Modernaவின் புதிய கோவிட்-19 தடுப்பூசிக்கு Therapeutic Goods Administration (TGA) தற்காலிகமாக ஒப்புதல் அளித்துள்ளது.

இருப்பினும், 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய நபர்களில் இது booster தடுப்பூசியாக பயன்படுத்தப்படுவதற்கு முன், Australian Technical Advisory Group on Immunisation (ATAGI) இன் ஒப்புதல் தேவைப்படுகிறது.

ஓமிக்ரான் மற்றும் அதன் BA.1 திரிபைக் குறிவைக்கும் Modernaவின் மற்றொரு தடுப்பூசிக்கு ATAGI ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது.
Long Covid நோயால் பாதிக்கப்பட்ட பலர் தாம் அரசால் கைவிடப்பட்டதாக உணர்வதாக Burnet Institute தலைமை நிர்வாகி Brendan Crabb ஒரு நாடாளுமன்ற விசாரணையில் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் கொள்கை பெரும்பாலும் COVID-ஐ அடிப்படையாகக் கொண்டதாகவும் இதன் மூலம் பாதிக்கப்படக்கூடியவர்களை பாதுகாக்க முயற்சிக்கிறது என்றும் Long Covidஆல் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் அதிக அக்கறை காட்டப்படவில்லை எனவும் அவர்கள் உணர்வதாக அவர் கூறினார்.

கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கு நோய்தொற்று ஏற்பட்டால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான எட்டு மடங்கு அதிக ஆபத்தைக் கொண்டுள்ளதாகவும், சரியான முறையில் தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டவர்களுடன் ஒப்பிடும்போது ஐந்து மடங்கு அதிகமாக இறப்பு அபாயமும் இவர்கள் மத்தியில் காணப்படுவதாகவும் ஒரு புதிய ஆய்வு கூறுகிறது.
உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணங்கள் இன்னும் தொற்றுநோய்க்கு முந்தைய நிலைக்கு திரும்பவில்லை என்பதை சிட்னி விமான நிலையத்தின் சமீபத்திய தரவு காட்டுகிறது.

ஜனவரி 2023 இல் மொத்தம் 3,120,000 விமானப் பயணிகள் சிட்னி விமான நிலையத்தினூடாக சென்றனர். ஜனவரி 2019 இல் விமான நிலையத்தைப் பயன்படுத்திய விமானப் பயணிகளுடன் ஒப்பிடும்போது இது 79 சதவீதமாகும்.

நேர்மறையான RAT முடிவுகளைப் பதிவுசெய்யவேண்டுமென்ற நிபந்தனையை ACT பிப்ரவரி 28 அன்று நீக்குகிறது.

1 மார்ச் 2023 முதல், ACT குடியிருப்பாளர்கள், நூலகங்கள் (Heritage Library தவிர்த்து) மற்றும் Access Canberra சேவை மையங்கள் உட்பட பல இடங்களில் இருந்து இலவச RATகளை சேகரிக்கலாம்.
NSW மாநிலத்தில் வாராந்திர கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் சிறிது அதிகரிப்பு காணப்படுகிறது. கடந்த வாரம் பதிவான 6033 தொற்றுகளுடன் ஒப்பிடும்போது இவ்வாரம் 6545 தொற்றுகள் பதிவாகியுள்ளன.

விக்டோரியாவில் இந்த வாரம் 3052 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. முந்தைய வாரத்தில் இது 3334ஆக இருந்தது.

இதற்கு முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது, கடந்த 28 நாட்களில் உலகளாவிய COVID தொற்றுகள் 89 சதவீதம் குறைந்துள்ளதாகவும், இறப்புகளில் 62 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் தனது சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது, அமெரிக்கா, ஜப்பான், சீனா, கொரியா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளில் அதிக அளவில் COVID தொற்றுகள் பதிவாகியுள்ளன.

Omicron BA.5 தொடர்பான புதிய தொற்றுகள் குறைந்து வருவதாக WHO கூறியுள்ளது.

Long COVID clinic அமைந்துள்ள இடங்கள் குறித்த தரவுகளை இங்கே காணலாம்:
கோவிட் சோதனை எங்கே செய்யலாம் என்ற தரவுகளை இங்கே காணலாம்:
Rapid antigen சோதனை (RAT) நேர்மறை முடிவுகளை இங்கே பதிவுசெய்யுங்கள்
உங்கள் மொழியில் அனைத்து கோவிட்-19 தகவல்களைப் படிக்க: SBS Coronavirus portal

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in  
பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் 
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share

Published

Updated

Source: SBS

Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand