SKIP TO MAIN CONTENT

மாடு ஒன்று McDonald'sற்கு காரில் சென்றது ஏன்?

நம்மில் பலர் பிறந்த ஊர்களில் மாடுகள் வண்டி இழுப்பதைப் பார்த்திருக்கிறோம். சில வேளைகளில் மாடுகளை வண்டிகளில் ஏற்றிச் செல்வதையும் பார்த்திருக்கிறோம். ஆனால், ஒரு மோட்டார் வண்டி (Car)யில் மாடு சவாரி செய்வதைப் பார்த்திருக்கிறோமா?

A cow seen through the window was in fact one of three in the car.
A cow seen through the window was in fact one of three in the car. Source: Jessica R Nelson/Facebook

1 min read

Published

Updated

By Kulasegaram Sanchayan


Skip to article content

அமெரிக்காவின் Wisconsin மாநிலத்தில் Marshfield என்ற இடத்தில், உணவு வாங்குவதற்காக Jessica Nelson என்பவர் McDonald’s உணவகத்திற்கு அண்மையில் சென்றிருக்கிறார்.

அவருக்கு எதிரே சென்ற வாகனத்தினுள் வினோதமான பயணி ஒருவரைப் பார்த்ததும் வெறும் போஸ்டர் என்று நினைத்தார்.  அந்தப் பயணி அசைய ஆரம்பித்ததும், அவரது கமராவை சுழல விட்டிருக்கிறார். 

ஒரு போலி மாடு என்று நினைத்தார்... ஆனால் அது நகர ஆரம்பித்தது

அந்த மாட்டை ஒரு கண்காட்சியில் வாங்கியவர் அதனை வீட்டிற்கு எடுத்துச் செல்ல, அவரது வாகனத்திலேயே ஏற்றியிருக்கிறார்.  அந்த மாடு மட்டுமின்றி, அதன் இரண்டு கன்றுக்குட்டிகளும் அந்த வாகனத்தில் பயணித்திருக்கின்றன.

இவர் எடுத்த வீடியோ, வீரியமாகப் பரவி ஒரே நாளில் 50,000 பேரால் பார்க்கப்பட்டிருக்கிறது.

இது போன்ற அனுபவம் உங்களுக்கு நேர்ந்திருந்தால் அதை எம்முடனும் சக நேயர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்களேன்.


SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now