SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் தென்னாபிரிக்க பயணம் ரத்து!

Day three of the second Test Match between Australia and India at The MCG, Melbourne on 28 December, 2020.
Day three of the second Test Match between Australia and India at The MCG, Melbourne on 28 December, 2020. Source: AAP

1 min read

Published

Updated


Skip to article content

தென்னாபிரிக்காவில் வேகமாக பரவிவருகின்ற கொரோனா தொற்று காரணமாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அங்கு மேற்கொள்ளவிருந்த கிரிக்கெட் சுற்றுலாவை ரத்துச் செய்துள்ளது.

இதனை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்திய அணியுடன் ஆஸ்திரேலியாவில் இடம்பெற்ற ஆட்டங்களை நிறைவு செய்துகொண்டு அடுத்த மாதம் - மார்ச்சில் - மூன்று டெஸ்ட் போட்டிகளுக்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் தென்னாபிரிக்கா செல்வதற்கு ஏற்பாடாகியிருந்தது.

ஆனால், தென்னாபிரிக்காவில் தற்போது பரவிவருகின்ற கொரோனா தொற்று, அங்கு கிரிக்கெட் சுற்றுலா செல்வதற்கு ஏற்புடையதாக இல்லை என்றும் தென்னாபிரிக்க மக்களுக்கு விரைவில் கொரோனா தடுப்பூசி கிடைத்து, இந்த இடர்காலத்திலிருந்து மீண்டுவரவேண்டும் என்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்  தெரிவித்துள்ளது.

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline- 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல்தொண்டை நோவுஇருமல்உடற்சோர்வுசுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now