மனவள ஆலோசனைகளை தமிழ்மொழியிலேயே பெற்றுக்கொள்ள நடவடிக்கை

மன நலம் குறித்த சேவைகளை ஒருவர் பேசுகின்ற மொழியில், அவருடைய சமய கலாச்சார பின்னணியைப் புரிந்து கொண்டவர்களிடமிருந்து பெறுவதற்கு, தற்போது வழி அமைக்கப்பட்டுள்ளது.

Some of the professionals listed on HeartChat.

Some of the professionals listed on HeartChat. Source: HeartChat.com.au

பாடசாலையில் படிக்கும் போது, தனது மனநல ஆரோக்கியத்திற்காக, பாடசாலை மனநல ஆலோசகரின் உதவி பெற்றிருக்கிறார் Semonti.

இப்போது, மெல்பேர்ணில் வசிக்கும் இவர் இருபது வயதைத் தாண்டினாலும் தனது கல்வி மற்றும் எதிர்காலம் குறித்த பயம் மற்றும் அதனால் ஏற்படும் மன அழுத்தங்களுடன் போராடிக் கொண்டிருந்தார்.

பல ஆண்டுகளுக்குப் பின்னர், ஒரு psychologist - உளவியல் நிபுணரின் ஆலோசனை பெற சென்றபோது, அவர் தன்னைப் புரிந்து கொள்ளவில்லை என்பதை உணர்ந்தார்.  வேறு கலாச்சாரப் பின்னணி ஒரு காரணமாக இருக்கலாம் அல்லது தனது நிலமையை அவர் விளங்கிக் கொள்ளாமல் இருந்திருக்கலாம் என்கிறார் Semonti.

இதனை மனதில் வைத்து, கடந்த வார இறுதியில் ஒரு புதிய இணைய வழி சேவை ஆரம்பிக்கப் பட்டிருக்கிறது.  HeartChat என்ற பெயர் கொண்ட இந்த சேவை October 3ஆம் தேதி ஆரம்பமாகியுள்ளது.

வேறுபட்ட கலாச்சார மற்றும் மொழி பின்னணியைச் சேர்ந்தவர்களை, அவர்களது பின்னணியுடன் தொடர்புடைய மனநல நிபுணர்களுடன் தொடர்பு கொள்ள வைக்கிறது HeartChat என்ற சேவை.

ஆதரவை நாடுபவர்களுக்கு, அவர்கள் மொழி பேசுகிற, அவர்கள் கலாச்சார பின்னணி கொண்ட மற்றும் அவர்களது சமய நம்பிக்கையுள்ள மனநல நிபுணர்கள் யார் என்ற பட்டியல் கிடைக்கும்.  அதிலிருந்து, தமக்குகந்த மனநல மருத்துவருடன் telehealth வழியாக சேவை பெறமுடியும்.
HeartChat
هارت‌چت حاوی معلوماتی چون زبان و باورهای مذهبی متخصصان نیز می‌باشد. Source: HeartChat.com.au
Victoria மாநில பல்கலாச்சார ஆணையத்தின் ஆணையர் neuropsychologist - நரம்பியல் உளவியலாளர் Dr Judy Tang,  HeartChat என்ற சேவை ஒரு முக்கிய செயல்முறை என்கிறார்.

ஒருவர் தன்னுடைய மத விதிமுறைகள், கலாச்சார நுணுக்கங்கள், பாலியல் விருப்பத்தேர்வுகள் போன்றவற்றை தனது மனநல ஆலோசகருக்கு விளங்கப்படுத்தத் தேவையில்லை என்றும், சில வேளைகளில் உங்களது பின்னணி தெரிந்த ஒருவரை அணுகுவது உயிர் காக்கும் செயலாக அமையும் என்றும் Dr Judy Tang கூறுகிறார்.

துரதிர்ஷ்டவசமாக, ஒருவரின் பின்னணியைப் புரிந்து கொள்ளத் தவறும் மனநல நிபுணர்கள் சிலர் மனதைப் புண்படுத்தும் வகையில் நடந்து கொண்ட நிகழ்ச்சிகளை அவர் கேள்விப்பட்டிருப்பதாக சொல்கிறார்.

சிட்னியை தளமாகக் கொண்ட உளவியலாளர் Jelena Zeleskov Doric, Serbian பின்னணி கொண்டவர்.  HeartChat இணையதளத்தில் மனநல நிபுணராக பதிவு செய்துள்ளார்.

கலாச்சார நடைமுறைகள் அல்லது பழக்கவழக்கங்களை விளக்கவோ அல்லது அவர்களின் வேறுபாடுகளைப் பற்றிக் கருத்துக் கூறவோ தேவை இல்லாமல் தன்னை அணுகுபவர்களுக்கு சேவை வழங்க முடியும் என்று அவர் கூறுகிறார்.
Some of the professionals listed on HeartChat.
Some of the professionals listed on HeartChat. Source: HeartChat.com.au
Bulgarian, Macedonian, மற்றும் Slovenian உள்ளிட்ட பல மொழிகளைப் பேச வல்லவர் Jelena Doric.

தங்கள் சொந்த மொழியில் பேசக் கூடிய ஒருவரை விரும்புபவர்களின் அழைப்புகளை அடிக்கடி பெறுவதாக Jelena Doric சொல்கிறார்.
Dr Jelena Doric
یکی از روان‌شناسانی که نامش را درج هارت‌چت کرده، جِلِنا زلسکوف دوریک است. Source: Supplied
இதேவேளை இதுவரை இருந்த நடைமுறையில், கலாச்சார மற்றும் மொழி போன்றவை ஏற்படுத்தும் தடைகள் காரணமாக உதவியை நாடுவதை தவிர்த்தவர்கள், உதவி பெற இந்த சேவை ஊக்கப்படுத்தக்கூடும் என்று நரம்பியல் உளவியலாளரான Dr Judy Tang கருதுகிறார்.

கலாச்சார ரீதியாக வேறுபட்ட ஆஸ்திரேலியர்கள், நீண்டகாலமாக ஆதரவு சேவைகளைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர், மொழி அல்லது கலாச்சார தடைகள், மனநோயைச் சுற்றியுள்ள தங்கள் சமூகங்களில் உள்ள களங்கம் அல்லது பார்வை என்பவற்றால், எங்கே ஆரம்பிப்பது என்று கூடத் தெரியாமல் இருந்த காரணத்தால், கொரோனா வைரஸ் தொற்று பரவலாகிய வேளையில் மனநல உதவி சேவைகளுக்கான அழைப்புகள் அதிகரித்துள்ளன.

மாறுபட்ட பின்னணியைச் சேர்ந்தவர்கள் சரியான வகையான ஆதரவைப் பெறுவதற்கான தேவை இப்போது மிகமுக்கியமாகிவிட்டது என்று Dr Judy Tang கூறுகிறார்.

மனவள ஆலோசனைகளை தமிழ்மொழியிலேயே பெற்றுக்கொள்வதுகுறித்த மேலதிக விபரங்களுக்கு HeartChat.com.au

உங்களுக்கு உதவி தேவை என்றால், 13-11-14 என்ற எண்ணில் Lifelineஐ தொடர்பு கொள்ளவும்.

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline- 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

 

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

 

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால்

 

அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

 

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள்   sbs.com.au/coronavirus  என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.

மனவள ஆலோசனைகளை உங்கள் மொழியில் எங்கெங்கு பெற்றுக்கொள்வது என்பது குறித்த குறித்த மேலதிக விபரங்களுக்கு:

Share

Published

Updated

By Rashida Yosufzai

Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand