SKIP TO MAIN CONTENT

Dandenong Ranges விபத்து: உயிரிழந்த மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இந்தியர்கள்!

cc
The accident site at Dandenong Ranges. Source: Nine Network

1 min read

Published

Updated


Skip to article content

மெல்பேர்னில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் பலியான மூவரும் இந்தியப்பின்னணி கொண்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

Dandenong Ranges பகுதியில் 5 பேருடன் பயணம் செய்துகொண்டிருந்த கார் மீது மரம் வீழ்ந்ததில் இவ்விபத்து சம்பவித்திருந்தது.

குறித்த விபத்தில் காரிலிருந்த Swarnjit Singh Grewal -Amandeep Kaur Grewal தம்பதியரும், இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த அவர்களது மைத்துனரும் பலியாகினர்.

இத்தம்பதியரின் 4 வயது குழந்தையும் காரிலிருந்த மற்றுமொரு பெண்ணும் காயங்களுடன் உயிர்தப்பினர்.

காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை Dandenong Ranges பகுதியில், கடந்த ஆண்டு ஜுன் மாதம், இதேபோன்று கார் மீது மரம் வீழ்ந்ததால் ஏற்பட்ட விபத்தில், தந்தையும் 10 வயது மகனும் பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now