மெல்பேர்ன் Dandenong கவுன்ஸில் பிரதேசத்தில் இஸ்லாமிய சட்டங்களில் சில அனுபந்தங்களை அமுல்படுத்துவதற்கு Dandenong கவுன்ஸில் நிர்வாகம் தீர்மானித்திருப்பதாக Dandenong கவுன்ஸில் கடிதத்தலைப்புடன் பரவிவரும் கடிதங்கள் பொய்யானவை என்றும் அவற்றை நம்பவேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் இயங்கும் இரண்டு இஸ்லாமிய அமைப்புக்கள் என்று தெரிவித்து இரண்டு போலிப்பெயர்களில் அமைந்த அமைப்புக்களை குறிப்பிட்டு, அவற்றின் அனுசரணையுடன் இந்த இஸ்லாமிய சட்ட பிரிவுகளை அமுல்படுத்துவதற்கு Dandenong கவுன்ஸில் முடிசெய்திருப்பதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
Dandenong கவுன்ஸில் பகுதியில் பெண்கள் அணியும் ஆடைகள் மீதான கட்டுப்பாடு, மற்றும் பன்றி இறைச்சி - மது போன்றவற்றின் மீதான தடையும் இந்த சட்டத்தின் பகுதிகள் என்றும் அந்த கடிதத்தின் மூலம் புரளியை கிளப்பிவிட்டிருக்கிறார்கள்.
இந்த கடிதத்தினையும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களையும் முற்றாக நிராகரித்துள்ள Dandenong கவுன்ஸில் சகல ஊடகங்கள் வாயிலாகவும் தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியிருக்கிறது.
