விக்டோரிய Premier Daniel Andrews என்பு முறிவுக்குள்ளானநிலையில் தீவிர சிகிச்சைப்பரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்றுகாலை வேலைக்குப் புறப்பட்ட அவர் ஈரலிப்பான படிக்கட்டின்மேல் நடந்தபோது தவறிக்கீழே விழுந்ததாகவும் இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் விலா என்புகள் பல முறிவடைந்துள்ளதுடன் முள்ளந்தண்டு பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதுதொடர்பில் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்திவெளியிட்டுள்ள Premier Daniel Andrews, அடுத்த சில நாட்களுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் தங்கியிருக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தனது உடல்நலன் தொடர்பில் அக்கறை காண்பித்த அனைவருக்கும் தனது நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் அடுத்துவரும் நாட்களுக்கு விக்டோரியாவின் Acting Premier-ஆக James Merlino பதவிவகிக்கவுள்ளார்.
