ஆஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் David Coleman தனிப்பட்ட காரணங்களுக்காக காலவரையறையற்ற விடுப்பில் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து பிரதமரிடம் கோரிக்கை விடுத்ததற்கு அமைய அவர் அனுமதியளித்தாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குடிவரவு அமைச்சர் David Coleman விடுப்பில் சென்றுள்ள காலப்பகுதியில் அவரது அமைச்சுப்பொறுப்புக்களை பொதுமக்கள் - நகரங்கள் - புறநகர் அபிவிருத்தி அமைச்சர் Alan Tudge ஏற்றுக்கொண்டு பதில் கடமையாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் David Coleman மீண்டும் பணிக்கு திரும்பும்போது அவர் தனது அமைச்சுப்பொறுப்புக்களை மீண்டும் ஏற்றுக்கொள்வார் என்று பிரதமர் ஸ்கொட் மொறிஸன் உறுதியளித்துள்ளார்.
அமைச்சர் David Coleman சிட்னி Banks தொகுதியிலிருந்து தெரிவுசெய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
