SKIP TO MAIN CONTENT

மரணத்தைத் தேடி சுவிஸ் செல்லும் ஆஸ்திரேலிய விஞ்ஞானி!

104-year-old scientist
Source: Edith Cowan University

1 min read

Published

Updated

Presented by Renuka



Skip to article content

104 வயதான ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற விஞ்ஞானி David Goodall தன்னை கருணைக்கொலை செய்துகொள்வதற்காக இவ்வாரம் சுவிஸ் பயணமாகிறார்.

உடல் நலனை பாதிக்கும் வகையில் இவருக்கு நோய் எதுவும் ஏற்படவில்லை என்றபோதிலும் தனது வாழ்க்கை முறை மாறிவிட்டதாகவும் தான் மகிழ்ச்சியாக இல்லை எனவும் தெரிவித்துள்ள David Goodall தன்னுடைய வாழ்க்கையை முடித்துக்கொள்ள விரும்புவதாக கூறியுள்ளார்.

இதற்காக கருணைக்கொலை செய்வதை சட்டப்படி அனுமதிக்கும் சுவிஸ் நாட்டின் Basel-க்குச் செல்கிறார்.

குறித்த இடத்திலுள்ள மருத்துவமனை ஒன்றில் மரணமடைவதற்கான அனுமதியை முன்கூட்டியே பெற்றுள்ள David Goodall-இன் பயணச்செலவுகளுக்கு உதவவென Exit International என்ற அமைப்பு 20,000 டொலர்களை சேகரித்துக் கொடுத்துள்ளது.

தான் ஆஸ்திரேலியாவிலேயே மரணமடைய விரும்பியதாகவும் எனினும் இங்குள்ள சட்டம் அதை அனுமதிக்காததால் தனக்கு வேறு வழியில்லை எனவும் David Goodall தெரிவித்துள்ளார்.

பேர்த்தில் உள்ள Edith Cowen பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்த David Goodall-ஐ முதுமையைக் காரணம்காட்டி 2016-ம் ஆண்டு அவரை பதவியில் இருந்து நீக்க பல்கலைக்கழக நிர்வாகம் முற்பட்டதையடுத்து உலகெங்குமுள்ள ஊடகங்களில் அந்தச்செய்தி முக்கிய இடம்பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now