SKIP TO MAIN CONTENT

ஐந்து மாநில மக்களுக்கு ஞாயிறு அதிகாலை காத்திருக்கும் "பரிசு"

Day light saving
Source: SBS

1 min read

Published


Skip to article content

ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான பகுதிகளில்  Daylight saving நேரமாற்றம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை   நடைமுறைக்கு வருகிறது.

இந்த நேரமாற்றத்தின் மூலம் பலர் வழக்கமாக உறங்கும் நேரத்துடன் ஒரு மணி நேரம் அதிகமான தூக்கத்தைப் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.

வருடத்தின் ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் மேற்கொள்ளப்படுகின்ற இந்த நேரமாற்றம் 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மூன்று மணியளவில் இடம்பெறவுள்ளது.

இதன்படி நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா, தெற்கு ஆஸ்திரேலியா, டஸ்மேனியா மற்றும் ACT கடிகாரங்கள் 4 ஆம் திகதி அதிகாலை மூன்று மணிக்கு நேரமாற்றம் செய்யப்பட்டு இரண்டு மணியாக பின் நகர்த்தப்படும். பெரும்பாலான smart devices தானாகவே நேரமாற்றத்தை பிரதிபலிக்கும்.

அடுத்த நேரமாற்றம் எதிர்வரும் அக்டோபர் மாதம் 4 ஆம் திகதி அதிகாலை இரண்டு மணிக்கு இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

குயின்ஸ்லாந்து, Northern Territory மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா ஆகியவை இந்நேரமாற்றத்தில் பங்கெடுப்பதில்லை.

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline- 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now