SKIP TO MAIN CONTENT

Daylight saving நேரமாற்றம் ஒரு வாரத்தால் தாமதமாகின்றது!

For the first time since  2012 daylight savings will occur seven days after the start of October.
daylight savings Source: AAP

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

ஆஸ்திரேலியாவின் பல மாநிலங்களில் ஒவ்வொரு அக்டோபர் மாதமும் அமுலுக்கு வரும் Daylight saving நேரமாற்றம் இம்முறை சிலநாட்களால் தாமதமாகியுள்ளது.

நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா, ACT, தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் டஸ்மேனியா ஆகிய மாநிலங்களில் Daylight saving நேரமாற்றம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தின் முதலாவது ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவது வழக்கம். பெரும்பாலும் இது நீண்டவாரவிடுமுறையுடன்கூடிய ஞாயிற்றுக்கிழமையில் நடைபெறுவதுண்டு.

அந்தவகையில் இவ்வருட நேரமாற்றமும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நிகழும் என பெரும்பாலானவர்கள் கருதுகின்றனர். எனினும் இவ்வருட நேரமாற்றம் அக்டோபர் 7ம் திகதி அதிகாலை 2மணிக்கு அமுலுக்கு வரவுள்ளது.

கடந்த 2012-க்குப் பின்னர் முதல்தடவையாக இவ்வாறு Daylight saving நேரமாற்றம் தாமதமாகியுள்ளது.

அக்டோபர் 7ம் திகதி அதிகாலை 2மணிக்கு அனைவரும் தமது கடிகாரங்களை ஒரு மணிநேரத்திற்கு முன்னோக்கி நகர்த்தவேண்டும். இந்நேரமாற்றம் 2019 ஏப்ரல் 7ம் திகதி முடிவுக்கு வரவுள்ளது.

குயின்ஸ்லாந்து, Northern Territory மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா ஆகிய மாநிலங்கள் இந்நேரமாற்றத்தில் பங்கெடுப்பதில்லை.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now