SKIP TO MAIN CONTENT

Daylight saving நேரமாற்றம் நடைமுறைக்கு வருகிறது!

Daylight saving time
Daylight saving time. Clock. time. Fall back and spring forward. Cute vector cards. Source: Getty

1 min read

Published

Updated


Skip to article content

ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான மாநிலங்களில் Daylight saving நேரமாற்றம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைமுறைக்கு வருகிறது.

இந்த நேரமாற்றத்தின் மூலம் பலர் வழக்கமாக உறங்கும் நேரத்துடன் ஒரு மணி நேரம் அதிகமான தூக்கத்தைப் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.

பொதுவாக Daylight saving நேரமாற்றம் ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மாதங்களில் ஆரம்பித்து ஏப்ரல் மாதம் முடிவுக்கு வருவது வழக்கம்.

இந்த மாற்றத்தின்படி, நியூசவுத் வேல்ஸ், விக்டோரியா, தெற்கு ஆஸ்திரேலியா, டஸ்மேனியா மற்றும் ACT கடிகாரங்கள் ஞாயிறு அதிகாலை மூன்று மணிக்கு நேரமாற்றம் செய்யப்பட்டு இரண்டு மணியாக பின் நகர்த்தப்படும்.

அடுத்த நேரமாற்றம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6ம் திகதி அதிகாலை இரண்டு மணிக்கு இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

குயின்ஸ்லாந்து, Northern Territory மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா ஆகியன இந்நேரமாற்றத்தில் பங்கெடுப்பதில்லை.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now