மெல்பேர்ண் நகருக்கு வடக்கே 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மங்களூர் பகுதியில், இன்று காலை 11:30 மணியளவில் சிறிய விமானங்கள் இரண்டு விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவம் குறித்த அனைத்து செய்திகளும் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை. இது குறித்த மேலதிக தரவுகள் கிடைத்தவுடன் அவற்றை நாம் எடுத்து வருவோம்.
மங்களூரில் பெரியதொரு விமானப் பயிற்சி வசதி மற்றும் விமான ஓட்டுனர் பயிற்சி முகாம் என்பன உள்ளன.
இந்த சம்பவம் விமான நிலையத்திலா அல்லது அதற்கு அருகிலா நடந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
சம்பவம் நடந்தபோது தான் அந்த இடத்தில் இருந்ததாகவும் சேதம் தீவிரமாக இருப்பதாகவும் Channel 9 நிருபர் Tony Jones கூறினார்.
“விமானத்தின் பல பகுதிகள் உடைந்து விட்டன ஆனால் விமானியின் நிலை என்ன வென்று தெரியவில்லை” என்று அவர் tweet செய்துள்ளார்.
இந்த விபத்தில் இன்னொரு விமானமும் தொடர்புபட்டுள்ளதாக தீயணைப்பு ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.
Avenel என்ற இடத்தில், Hume Freewayயின் தெற்கு நோக்கிப் பயணிக்கும் சாலை மூடப்பட்டுள்ளது
